உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிஎச்.டி., முடித்தவர்களால் போட்டித்தேர்வில் வெற்றி பெற முடியல கவர்னர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டு

பிஎச்.டி., முடித்தவர்களால் போட்டித்தேர்வில் வெற்றி பெற முடியல கவர்னர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி ராஜ்பவனில் பல்கலை துணைவேந்தர்கள் மாநாடு நேற்று துவங்கியது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநாட்டில், தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து பேசியதாவது:நம் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக, இங்கு நான்காவது முறையாக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. எதற்காக இதை நாம் செய்கிறோம் என்பதை துணை ஜனாதிபதிக்கு விளக்கமாகக் கூறுகிறேன். 2021ல் ஒரு வேந்தராக நான் பல்கலைக்கு சென்றேன். அங்கு, பிஎச்.டி., முடித்த மாணவர்களை சந்திக்க நேரிட்டது. தங்கப்பதக்கம் வாங்கிய அவர்களிடம் நான் பேசும்போது, அவர்களின் விளக்கம் ரொம்ப குறைவாக இருந்தது.மேலும் அவர்கள், ஒரு சாதாரண வேலையில் போய் சேர்ந்துவிட்டால் போதும் என்ற மனநிலையில் இருந்தனர். அப்போதுதான், நம் கல்வித்தரம் எவ்வாறு உள்ளது என்பது எனக்கு புரிந்தது. மாநிலத்தில், தனியார் பள்ளிகளின் தரம் உயர்ந்திருந்தது; அதேவேளையில், அரசு பள்ளிகளின் தரம் தாழ்ந்திருந்தது. பள்ளி மாணவர்கள் 2ம் வகுப்பு புத்தகத்தைக்கூட படிக்காத நிலையில் இருந்தனர். பெரும்பாலான மாணவர்கள் ஒன்று முதல், 99 வரையிலான எண்களைக் கூட சரியாக சொல்ல முடியவில்லை. இது, ஒரு புறம் இருக்க, பல்கலைகளிலும் சில பிரச்னைகள் இருந்தன.தமிழக உயர்கல்வித்துறை, தேசிய சராசரியை விட, 50 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், 6,500 பிஎச்.டி., முடித்த மாணவர்கள் வெளியே வருகின்றனர். ஆனால், அதில் ஒரு சதவீதம் கூட போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத நிலையில் உள்ளனர். ஏன் இந்த நிலை இங்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தோம்.

தரம் குறைவு

அதன்பிறகு தான், இதுபோன்ற மாநாடுகளை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். தமிழகத்தில் உள்ள நிகர்நிலை பல்கலைகள் சிறப்பாக செயல்படுகின்றன. அதே வேளையில், அரசு பல்கலைகளின் தரம் குறைவாகவே உள்ளது.ஒரு காலத்தில் சென்னை பல்கலைக்கழகம், நாட்டிலேயே ஐந்தாவது இடத்தில் இருந்தது. ஆனால், இப்போது அது இல்லை. இப்படி பல்கலைகளின் தரம் குறைந்து வருவதால், சமுதாயத்திலும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு தொடர்ந்ததால் தான், 2022ல் இத்தகைய மாநாட்டை துவக்கி வைத்தோம். இதன்பிறகு பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இன்றைய மாநாட்டில் பல தொழில்துறை சார்ந்தவர்கள், வல்லுநர்கள் வந்துள்ளனர். அவர்கள் மாணவர்களுடைய கல்வித்தரம், வாழ்க்கை உயர்வு குறித்து வழிகாட்ட உள்ளனர்.கல்வியின் தரத்தை உயர்த்தும் இதுபோன்ற மாநாட்டில் அரசியலை புகுத்தக்கூடாது. இங்கு வந்துள்ள அனைவருக்கும், என் வாழ்த்துகள். துணை ஜனாதிபதி எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து அறிவுரை வழங்குவார். அவருக்கு நன்றி.இவ்வாறு பேசினார்.

ஐந்து பேர் வரவில்லை

தமிழகத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில், 13ல் துணைவேந்தர்கள் இல்லாததால், யாரும் பங்கேற்கவில்லை. ஐந்து பல்கலைகளின் துணைவேந்தர்கள் வரவில்லை. ஊட்டிக்கு வந்த இரு துணைவேந்தர்கள், சில காரணங்களால் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.ஆனாலும், பங்கேற்காத சரியான பல்கலை துணைவேந்தர்கள் பட்டியலை, மாநாட்டில் இருந்த ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிடவில்லை.

பங்கேற்ற துணைவேந்தர்கள்

* தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர், கிருஷ்ணன்* திண்டுக்கல் காந்திகிராம் பல்கலை -பஞ்சநாதன்* அவிநாசிலிங்கம் பெண்கள் பல்கலை -பாரதி ஹரிசங்கர்* ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பல்கலை ரஜத்குப்தா* எஸ்.ஆர்.எம்., பல்கலை -முத்தமிழ் செல்வன்* சிவ்நாடார் பல்கலை -பட்டாச்சாரியார்* அமித் பல்கலை ராஜேந்திரன்* விநாயகா பல்கலை -சுதிர்* நுாருல் இஸ்லாம் பல்கலை -சஜின் நற்குணம்* சென்னை செயின்ட் பீட்டர்ஸ் பல்கலை -மால்முருகன்இவர்களுடன், 21 பிற பல்கலைக்கழகங்களின் இயக்குநர்கள், டீன்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sundar R
ஏப் 26, 2025 11:46

மேதகு ஆளுநர் அவர்கள், தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களின் கல்வித்தரத்தினை ஆய்வு செய்வதும், தரத்தினை உயர்த்த இதுபோன்ற மாநாடுகள் நடத்துவதும் பாராட்டுக்குரியதே. மாடு மேய்ப்பதற்குக் கூட லாயக்கில்லாதவர்களான ஆட்கள் தமிழக சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களாக அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு A, பி, சி, D....ன் 26 எழுத்துக்களில் 18 எழுத்துக்கள் தெரியாது. அவர்களால், தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் உபத்திரவங்களைத் தவிர ஒரு பயனும் கிடையாது. அவர்களை அடியோடு ஒழிப்பதற்கான செயல்களை மேதகு ஆளுநர் அவர்கள் செய்தால், தமிழகத்திற்கு நலமும், தமிழக மக்களுக்கு நல்வாழ்வும் கிடைக்கும்.


Kasimani Baskaran
ஏப் 26, 2025 10:35

கல்வியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் பத்து தமிழக மந்திரிகளை அதே இடத்தில கொடுக்கப்பட்ட தலைப்பில் ஒரு பக்க கட்டுரை எழுதி அதை தவறில்லாமல் வாசிக்கச்சொல்லுங்கள் பார்க்கலாம். இப்பேர்ப்பட்டவர்கள் நம்மை ஆளுமளவில் ஓட்டுப்போட்டது கலப்படமில்லா கிரிமினல்த்தனம்.


rajan
ஏப் 29, 2025 08:04

கடந்த நாட்களில் துணை வேந்தர்கள் பேசியதை செய்தி தாளில் படிக்கவும்.


நாஞ்சில் நாடோடி
ஏப் 26, 2025 09:34

கலைஞ்சர் சமசீர் கல்விகொண்டுவந்த அன்றே முடங்கியது அரசு பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களின் திறன் ...


Venkatesan Srinivasan
ஏப் 27, 2025 08:55

சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்திய உடன் அதுவரை சராசரி கல்வி திறன் மட்டுமே கொண்ட 50 சதம் மட்டுமே மதிப்பெண் பெற்று வந்த மாணவர்கள் 90 சதத்தை கடந்து மதிப்பெண் பெற்ற காரணம் புகட்டும் கல்வியின் தரம் குறைந்த அளவே என்ற உண்மை பின்நாளில் வெளிவந்தது. அதுவே நீட் போன்ற போட்டி தேர்வுகள் எதிர் கொள்ள மாணவர்களுக்கு தடையாக இருந்தது என்ற உண்மையும் அவர்கள் பிரத்யேக பயிற்சி மையங்களை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நிலைமைக்கு காரணம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 26, 2025 09:01

அதைவிட அருவருப்பானது பி ஹெச் டி படித்த சமூக விரோதி ஒருத்தன் சைவம், வைணவத்தை அவமதிக்கிறான் ....


Minimole P C
ஏப் 26, 2025 08:28

Governor is honest and speaks truth unlike our CM.


அப்பாவி
ஏப் 26, 2025 08:07

என் கிட்டே வாங்க. உங்க கிட்டே தமிழ்நாடு பத்தி பத்து கேள்வி கேகிறேன். பாஸ் பண்ணுறீரா பாப்போம்.


MUTHU
ஏப் 26, 2025 09:08

ஆமாம் ராசா. இப்ப உள்ள இளைஞர்கள் அந்த விஷயத்தில் லாயக்கில்லாமல் போகின்றார்கள் என்று ஒரு கிழவன் சொன்னா அப்படீன்னா நீ அதற்கு லாயக்கானவன்னு நிரூபின்னு அந்த கிழவன் கிட்டயே சொல்வது போல் உள்ளது.


ஆரூர் ரங்
ஏப் 26, 2025 09:32

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விடியல்கிட்ட கேளுங்க. துண்டு சீட்டில் பதிலைத் தேடுவார்.


vivek
ஏப் 26, 2025 10:30

நீயே பாஞ்சு லட்ச உளறல் கேசு....உணகேது அவளோ அறிவு கோவாலா... ஓடி போயிடு


c.mohanraj raj
ஏப் 26, 2025 08:06

ஏனென்றால் இவர்கள் கல்வியை வளர்த்த லட்சணம் அப்படி அண்ணாவைப் படி பெரியாரைப் படி கருணாநிதியை படி எங்கள் குடும்பத்தில் படி என்று படித்துக் கொண்டிருந்தால் பிறகு எப்படி அவர்கள் படிப்பில் முன்னேறுவார்கள்


Sadananthan Ck
ஏப் 26, 2025 08:01

மிக மெத்த படித்த திண்டுக்கல் லியோனி சுபவி போன்றவர்கள் தான் இங்கு பள்ளி கல்வியின் தரத்தை தீர்மானிக்கிறார்கள் கல்வித்துறையின் அமைச்சர் உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களை பற்றி சொல்ல வேண்டாம் தமிழ்நாடு உருப்பட்ட மாதிரி தான்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 26, 2025 05:11

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி இங்கு மன்னன் மந்திரிமார்கள் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் பேசும் பேச்சுக்கள் அவர்களுடைய பார்வை எதுவும் சரியில்லை. தமிழ் பாடத்தில் அதிக மாணவர்கள் பெயில் ஆகிறார்கள் என்றால் உடனே பாடத்தை குறைக்கிறார்கள். சினிமா கூத்தாடிகள் பற்றி பாடம் வைத்துள்ளார்கள் பள்ளிகளில். எப்படி உருப்படும்.


R Dhasarathan
ஏப் 26, 2025 03:08

காப்பி பேஸ்ட் எடிட் செய்து பிஎச்டி வாங்குகிறார்கள், அவர்களால் எதுவும் செய்ய இயலாது.... அவர் சார்ந்துள்ள துறையில் கூட நிபுணத்துவம் எதிர்பார்க்க முடியாது. ஆளுநர் கூறுவது மிகவும் சரியே. ஆராய்ச்சி மானவர்களுக்கு மத்திய அரசு நிறையவே சலுகைகள் மற்றும் வெளி நாடு சென்று ஆராய்ச்சி செய்ய அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது... பயன் படுத்த யாரும் முன்வரவில்லை என்பது வேதனையான ஒன்று..


முக்கிய வீடியோ