உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெரினாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் கவர்னர் ரவி; பூங்கொத்து கொடுத்து முதல்வர் வரவேற்பு

மெரினாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் கவர்னர் ரவி; பூங்கொத்து கொடுத்து முதல்வர் வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, கவர்னர் ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக, கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். நாடு முழுவதும் 76வது குடியரசுத் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முக்கிய அதிகாரிகளை கவர்னருக்கு முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=968t0h7i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவப்பட்டது. தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ரவி ஏற்றுக்கொண்டார். சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னையில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஜன 26, 2025 10:05

அரசியல் சட்டத்தையே எரித்துக் கொண்டாடிய திமுக வுக்கும் குடியரசு தினத்துக்கும் சம்பந்தமே இல்லை. சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தவரை தந்தையாக போற்றும் அவர்கள் நாட்டிலிருந்தே வெளியேற்றப்பட வேண்டும்.


Svs Yaadum oore
ஜன 26, 2025 10:04

இன்று மதுரை மாவட்டம் அரிட்டாபட்டிக்கு வரவுள்ள முதல்வருக்கு மேலூர் மக்கள் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு.டங்ஸ்டன் விவகாரத்தில் மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முழக்கம். அரிட்டாபட்டி போராட்டத்தில் 5 ஆயிரம் மக்களை கைது செய்தது விடியல். இந்த பாராட்டு விழாவுக்கு அரிட்டாபட்டிக்கு மதுரை பாராளுமன்றம் வருகை உண்டா ?? அல்லது காணாமல் போய் விடுவானா ??...


RAAJ68
ஜன 26, 2025 09:09

சரி சரி ரெண்டு பேரும் சண்டை போடாம இருங்க


அப்பாவி
ஜன 26, 2025 08:27

இந்திய பாரம்பரிய உடையில் கெவுனர் ஜொலிக்கிறாரு.


AMLA ASOKAN
ஜன 26, 2025 10:23

இந்திய பாரம்பரிய உடையில் தொப்பிக்கு என்ன வேலை ?


Ray
ஜன 26, 2025 11:28

அடப்பாவி இப்படியா கிண்டலடிப்பே அது வெள்ளைக்காரன் தொப்பியாச்சே அவுரு வெள்ளைக்காரன் வழிவந்தவரோ படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோயில்


Matt P
ஜன 26, 2025 13:56

தொப்பியில் வெள்ளைக்காரன் தொப்பி இந்தியன் தொப்பி என்று இருக்கின்றதா? அப்படி பார்த்தால் pants கூட வெள்ளைக்காரன் கண்டுபிடிப்பு தான். அப்புறம் ஏன் முதல்மந்திரியும் மகனும் ஏன் பண்ட்ஸ் போட்டுட்டு அலையுறாங்க? இன்றைய குடியரசு மக்களாட்சி அரசியலமைப்பெ வெள்ளைக்காரன் வழி வந்தது தான். வெள்ளைக்காரன் வழி என்று அரசியலமைப்பை நினைத்தால் மன்னராட்சி தான் இந்திய பாரம்பரை வழி.


Kasimani Baskaran
ஜன 26, 2025 14:05

300 ஓவா வராதுடோய்... பாத்து செய்...


புதிய வீடியோ