உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் ரவி ராமேஸ்வரம் வருகை; தூய்மை பணியில் பங்கேற்கிறார்

கவர்னர் ரவி ராமேஸ்வரம் வருகை; தூய்மை பணியில் பங்கேற்கிறார்

ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் நடக்கும் துாய்மை பணியில் கவர்னர் ரவி இன்று(ஜன.16) பங்கேற்கிறார்.கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 7:40 மணிக்கு மதுரை வருகிறார். அங்கிருந்து காரில் ராமநாதபுரம் விருந்தினர்மாளிகைக்கு வந்தடைகிறார். காலை உணவை முடித்துக்கொண்டு காலை 10:00 மணிக்கு ராமேஸ்வரம்செல்கிறார். அங்கு சுவாமி தரிசனம் செய்கிறார்.காலை 11:30மணிக்கு ராமநாதசுவாமி கோயிலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள துாய்மை பணியில் ஈடுபடுகிறார். அவருடன் தன்னார்வலர் இளைஞர்கள் பங்கேற்கின்றனர். மதியம்12:00 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் விருந்தினர் மாளிகை வருகிறார்.அங்கு சிறிது நேர ஒய்வுக்கு பின் மதுரை விமான நிலையம் செல்கிறார். மாலை 3:30 மணிக்குவிமானத்தில் சென்னை செல்கிறார். காலையில் ராமேஸ்வரம் செல்லும் முன் திருப்புல்லாணிஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ