உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்: கவர்னர் ரவி பேச்சு

தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்: கவர்னர் ரவி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழில் ராமாயணம் எழுதிய கம்பரை பற்றிய பாடம், பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்,'' என, கவர்னர் ரவி பேசினார்.சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கம்ப சித்திரம் விழா, நேற்று நடந்தது. கம்பரையும், ராமனையும் கொண்டாடும் இந்த திருவிழாவில், முன்னாள் அமைச்சர் ஹண்டே, சாஸ்த்ரா பல்கலை இயக்குநர் சுதா சேஷய்யன், எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, வழக்கறிஞர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் அமைச்சர் ஹண்டே, தான் எழுதிய ராமாயணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நுாலை, கவர்னரிடம் வழங்கினார். கம்பராமாயணத்தை பரப்பிய தமிழறிஞர்களுக்கு, கேடயங்கள் வழங்கி, கவர்னர் ரவி பாராட்டினார்.

ஆன்மிக ஆற்றல்

பின், கவர்னர் ரவி பேசியதாவது:கம்பர் ராமபக்தி பற்றியும், ராமரை பற்றியும் மிகச் சிறப்பாக, நம் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியில் எழுதி உள்ளார். இந்தியர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ராமர் இருக்கிறார். பழங்குடியினருக்கு ராமாயண கதைகள் தெரிந்துள்ளன. ஆன்மிக ஆற்றலே இந்தியாவின் பலமாக இருக்கிறது.ராமாயணத்தை தெரிந்து கொள்வதன் வாயிலாக, இளைஞர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் எழுச்சி ஏற்படுகிறது. தனிமனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஆட்சி முறை என, அனைத்திற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ராமாயணம். அனைத்து தர்ம, அறநெறிகளையும் போதிக்கிறது. சாதாரண மக்களுக்கும் அது சென்றடைந்துள்ளது.வடமாநிலங்களில் துளசிதாசரின் ராமாயணம் அறிந்துள்ளனர். அதே சமயத்தில், தமிழகத்தில் ராமரை பற்றி கேட்கும்போது, அதிகம் தெரிந்திருக்கவில்லை. எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அதேசமயம் சிவன், பெருமாள் பற்றி தெரிந்திருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, இந்தியா முழுதும், 'டிஜிட்டல்' திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. தமிழகத்தில் அவ்வாறு செய்யவில்லை. ஆனால், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வீடுகளிலும் தொலைக்காட்சி நேரலையில் மக்கள் பார்த்தனர்.

அரங்கேற்றம்

கம்பராமாயண விழா, கடந்த மார்ச் 30ம் தேதி, மயிலாடுதுறையில் கம்பர் பிறந்த ஊரில் துவங்கியது; நாளை முடிகிறது. இதைத் தொடர்ந்து, வரும், 12ம் தேதி ஸ்ரீரங்கத்தில் கம்பராமாயண அரங்கேற்றம் நடக்கிறது. கம்பர் விழா, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமின்றி, தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். கம்பர் குறித்து பள்ளி பாடத்தில் சேர்க்கப்பட வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் கம்பரை கொண்டு செல்ல வேண்டும். 'மிஷன் கம்பர், மிஷன் கம்பராமாயணம்!' இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

J.Isaac
ஏப் 07, 2025 13:26

ராமாயணம் சரித்திரமா? புராணமா?


venugopal s
ஏப் 06, 2025 22:37

தமிழர்களுக்கு ராமாயணம் என்றாலே அது கம்பராமாயணம் தான். வால்மீகி ராமாயணத்தை இங்கு யார் படிக்கின்றனர்?


Suppan
ஏப் 06, 2025 17:26

திருச்சி தேசியக் கல்லூரியில் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அறுபதுகளில் புகுமுகவகுப்பில் கம்பராமாயணம் பாடம் எடுத்தார். மற்ற வகுப்புக்களிலிருந்தும் மாண்வர்கள் வந்து அமர்வார்கள். என்னவொரு அருவிமாதிரியான சொல்லாற்றல்? மறக்கமுடியாது. இப்பொழுது கம்பராமாயணப்பாடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.


ஆரூர் ரங்
ஏப் 06, 2025 13:24

திமுக நிறுவனர் கம்பராமாயணத்தை இழிவுபடுத்தும் வகையில் செய்து கம்பரசம் என்று புத்தகம் எழுதினார். அது அவங்க தரம். இழிவு பிறவிகுணம். எங்கோ பிறந்த கவர்னர் திரு ரவி அவர்கள் கம்பனை புகழ்கிறார். வளர்ப்பு சிறப்பு.


J.Isaac
ஏப் 07, 2025 17:17

ராமாயணம், சரித்திரமா, புராணமா ?


Sankar
ஏப் 06, 2025 13:12

ரவிக்கு தமிழ் தெரியாவிட்டாலும் அவர் சொல்வது சரியே. கம்ப ராமாயணம சிலப்பதிகாரம் தமிழ் இலக்கியத்தின் கண்கள்


அப்பாவி
ஏப் 06, 2025 11:41

கம்பன் ஏமாந்தான். தமிழே தெரியாதவங்களெல்லாம் கம்பராமாயணம் பத்தி பேசுவதை கேட்டு. கம்பன் ஏமாந்தான்.


vbs manian
ஏப் 06, 2025 09:37

பாரதி கம்பர் மற்றும் தமிழில் அரிய படைப்பாளிகள் மாடலுக்கு ஒவ்வாமை ஆகும்.


PR Makudeswaran
ஏப் 06, 2025 09:31

சேக்கிழார் எழுதிய நாயன்மாரின் வரலாறாக பனிரெண்டாம் திருமுறையாக காணக்கிடைக்கிறது. ஒரு சந்தேகம். அண்ணாதுரைக்கு கம்பரை பிடிக்காது. தேன் சொட்டும் பாடல் கம்பரின் பாடல். மேற்படி ஆசாமி தேடி பிடித்து காமத்தை மட்டும் கம்பரசம் என்று எழுதிய மாபாவி தி மு க அரசுக்கு பாரதியை பிடிக்காது. கம்பரை பிடிக்காது. மதுவை மாபாவிகளை பிடிக்கும்.


பாமரன்
ஏப் 06, 2025 09:25

கம்ப ராமாயணம் ஏற்கனவே தமிழ் நாட்டில் பாட புத்தகங்களில் இருக்குன்னு யாராவது சொன்னால் தேவலை.


vivek
ஏப் 06, 2025 10:59

இங்கு தமிழே வரலை.


vivek
ஏப் 06, 2025 11:00

எங்கே ஒரு நாலு திருக்குறள் சொல்லேன்


S. Venugopal
ஏப் 06, 2025 08:25

நமது நாட்டில் பண்டைய காலத்தில் நமது ரிஷிகள், படைப்பாளிகள் மற்றும் சித்தர்கள் இயற்றிய பல நூல்கள் அறிவு அறிவியல், கணிதம், மருத்துவம், பொறியியல், தொலைநோக்கு பார்வை நிறைந்து உள்ளவைகளாகும். தற்பொழுது போல் அந்தகாலத்தில் நூலகங்கள் இல்லாமையால் அந்த நூல்கள் கோவில்களில் பாதுகாக்கப்பட்டன. அந்த நூல்கள் கோவில்களில் பாதுகாக்கப்பட்டமையால் அந்த நூல்களுக்கு சமய சாயங்கள் பூசி அந்த நூல்களில் உள்ள கிடைப்பதிற்கு அறிய பொக்கிஷங்களை நமது மாணவர்களுக்கு அறிமுகப்பபடுத்தாமல் போயிற்று. ஆகவே இந்த வரவேற்கப்படவேண்டிய முயற்சி நல்ல பயனைத்தரும்.


சமீபத்திய செய்தி