உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: கவர்னர் ரவி அதிரடி

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: கவர்னர் ரவி அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜின், 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையின் துணை வேந்தராக, 2021 ஆகஸ்ட்டில், பேராசிரியர் வேல்ராஜ் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நிறைவடைந்தது. எனினும், அவர் ஓய்வு பெறும் வயதை எட்டாததால், பல்கலையில் ஆற்றல், ஆராய்ச்சி துறையில், தொடர்ந்து பேராசிரியராக பணியாற்றி வந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m32o010w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஜூலை 31ம் தேதி, அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், பல்கலை சிண்டிகேட் குழுவின் ஒப்புதலின்படி, திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துணை வேந்தராக இருந்த போது, ஒரே பேராசிரியர், பல்வேறு கல்லுாரிகளில் பணிபுரிந்த விவகாரம் தொடர்பான புகாரில், அதை கண்காணிக்க தவறியதாக, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.இந்த சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து, பல்கலை வேந்தரான கவர்னர் ரவியிடம் வேல்ராஜ் மேல்முறையீடு செய்தார். தன் மீதான புகாரில், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், தான் மேற்கொண்ட நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகள் அனைத்தும், சிண்டிகேட் குழு ஒப்புதலுடன் நடந்தவை என்றும் கூறி, அதற்கான ஆவணங்களை கவர்னரிடம் சமர்ப்பித்தார்.இதுகுறித்து கவர்னர் விசாரித்தார். 'அனைத்து கல்லுாரிகளிலும் பணியாற்றிய பேராசிரியர்களின் விபரங்களை, பல்கலை இணையதளத்தில் வேல்ராஜ் வெளியிட்டதாலேயே, ஒரே பேராசிரியர் பல கல்லுாரிகளில் பணியாற்றியது போன்ற பதிவுகள் கண்டறியப்பட்டன. எனவே, வேல்ராஜ் மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க எந்தவித முகாந்திரமும் இல்லை' எனக்கூறி, அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை, கவர்னர் ரவி ரத்து செய்துள்ளார். மேலும், அவர் ஓய்வு பெற அனுமதி அளித்தும், அவருக்கான ஓய்வு கால பணப்பலன்களை வழங்கவும், கவர்னர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Iyer
செப் 09, 2025 06:01

இந்த வழக்கின் முழு உண்மைகள் யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. யார் செய்தது - சரி அல்லது தவறு - என்று கண்டிப்பதும் கடினம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. கவர்னர் ரவி ஒரு நேர்மையான தேசபக்தர். உண்மைக்கு புறம்பாகவோ, அநீதிக்கு துணையாகவோ அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது.


sankar
செப் 09, 2025 05:45

இப்போ பாரு திராவிட முதகவர் பொங்குவாரா இல்லை பதுங்குவாரா


Ramesh Sargam
செப் 09, 2025 00:53

கவர்னரின் தீர்ப்பு மிக சரியான தீர்ப்பு. ஆளும் திமுகவினருக்கு சரியான ஆப்பு.


ManiMurugan Murugan
செப் 09, 2025 00:26

ManiMurugan Murugan அருமை ஒரு ஆசிரியர் பல கை இரு ரி களில் வேலை பார்ப்பது என்பது பகுதி நேரமாகவா அப்படி என்றாலும் கிண்டி கேட்டு க்கும் தெரிந்து தானே இருக்கும் அவரது ஓய்வு க்கு பிறகு அவருடைய சலுகைகளை பெற ஆளுநர் உரிமைப் கொடுத்தது வரவேற்கத்தக்கது


Anantharaman Srinivasan
செப் 09, 2025 00:16

கவர்னரின் அதிரடி உத்தரவை எதிர்த்து திமுக அரசு கோர்ட் படி ஏறுமா..?


vadivelu
செப் 09, 2025 08:30

ஏறலாம், வக்கீல்கள் சம்பளமும் ஏறலாம்


Sivaram
செப் 08, 2025 22:30

செனட் மெம்பர் ஸ்டாலின் மகன் பெயர் அடிபட்டதே அந்த விஷயம் என்ன ஆனது வாசகர்கள் மறந்து இருப்பார்களா


subramanian
செப் 08, 2025 22:30

மேதகு ஆளுநர் மிகவும் சரியாக செயல்பட்டு உள்ளார். அராஜக திமுக, நேர்மையான அதிகாரியை ஓய்வு பெறும் நேரத்தில் கொடுமை படுத்தி உள்ளது


Ram
செப் 08, 2025 21:13

சரியான தீர்ப்பு , இந்தக் திராவிட கழகத்தினர் நேர்மையானவர்களை மிரட்டுவதைய வழக்கமாக வைத்திருக்கிறார்கள்


GMM
செப் 08, 2025 21:02

கவர்னர் தான் தமிழக நிர்வாக தலைவர். துணை வேந்தர் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து சரியான நிர்வாக நடவடிக்கை. கவர்னர் உத்தரவு தான் செல்லும். சட்ட பேரவை, நீதிமன்றம் பரிந்துரை தான் செய்ய முடியும். அரசியல் சாசனம் கவர்னர் பதவிக்கு மாநில அளவில் முழு அதிகாரம் கொடுத்துள்ளது. கவர்னர் உத்தரவு தான் கேஜெட்டில் பதிவு ஆகும். உண்மையான ஜனநாயக நிர்வாக துவக்கம். வரவேற்போம்.