உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக சட்டசபை மரபை கவர்னர் காக்க வேண்டும்: விஜய்

தமிழக சட்டசபை மரபை கவர்னர் காக்க வேண்டும்: விஜய்

சென்னை: தமிழக சட்டசபை மரபை கவர்னர் காக்க வேண்டும் என தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=370oqa5x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டசபையின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டசபையின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டசபை மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.ஒவ்வொரு முறை சட்டசபை கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் கவர்னருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டசபையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.எனவே சட்டசபை நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankaranarayanan
ஜன 06, 2025 21:02

எல்லாமே தெரிந்த விஜய் இதுபோன்று துவக்கத்திலேயே தாறுமாறாக பேசக்கூடாது தெரியவில்லையென்றால் மவுனமாகவே இருக்க வேண்டும் இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி தேசிய கீதம்தான் ஆளுநர் உறவுக்கு முன்பும் பின்பும் பாடப்பட வேண்டும் இதுதான் நியதி ஆனால் கருணாநிதியினால் இடையில் புகுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாம் ஆனால் தேசிய கீதம் பாடிய பின்னுதான் பாட வேண்டும்


Ramesh Sargam
ஜன 06, 2025 19:48

இவர் என்றைக்கு யார் பக்கம் சாய்வான என்று தெரியவில்லை. ஒரு நாள் ஆளும் திமுக கட்சிக்கு ஆதரவாக பேசுகிறான். ஒரு நாள் எதிராக பேசுகிறான். இப்படிப்போன்றவர்களிடம் மற்ற கட்சியினர், மக்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். தம்பிக்கு அரசியல் பாடம் இன்னும் சரியாக புரியவில்லை. ஏதோ நடிகர் என்கிற ஒரே பந்தாவில் அரசியலில் கால் பதித்துவிட்டார். இனிமேல்தான் இருக்கிறது நிறைய கற்றுக்கொள்ள.


M Ramachandran
ஜன 06, 2025 19:19

பாசத்தினால் கட்டுபடுத்த இயல முடிய வில்லை. ஜோசப் விஜய் என்கிற குதிரைக்கு மூக்கு வெளுக்குது. அப்புறம் அது குதிரையாகா இருக்க முடியாது. அதன் இனத்துடன் போய் சேர்ந்து விடும்.


Raj
ஜன 06, 2025 17:26

முதலில் சட்டசபை மரபை தெரிந்து விட்டு பேச வேண்டும். கூட்டத்தில் ஜால்ரா போடக்கூடாது. அரசியலில் சிறுபிள்ளை தான் நீங்கள்.


m.arunachalam
ஜன 06, 2025 17:24

முன்னிலை படுத்திக்கொள்ள எதையாவது உளற வேண்டிய கட்டாயம் . சுயசோதனை பயன் தரும் . நம் tha


HoneyBee
ஜன 06, 2025 16:50

கூ முட்ட... இங்க தேசிய கீதத்தை தான் முதலில் கொண்டாடுகிறோம்.. உன்னை போல் கேரவான் கூமுட்ட பாடிய பாட்டில திறக்கட்டா என்ற பாடலை அல்ல. புரிந்து கொள்ள வேண்டும் இந்த அறிவாலய அடுத்த கக்கூஸ் கழுவி


vijay
ஜன 06, 2025 16:42

எந்த வகையில் மரபை கவர்னர் அவர்கள் மீறி விட்டார் என்று விளக்கமாக கூறுங்கள் விஜய் .


vijay
ஜன 06, 2025 16:18

திரு விஜய் அவர்களுக்கு , ப்ரோடோகால் இதுவரை தமிழக சட்ட சபையில் எப்படி பின்பற்றி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அறிக்கை விடுங்கள். யாராவது எழுதி கொடுத்து தருவதை பத்திரிக்கையில் அறிக்கை விடுவுது என்று இருந்தால் பனையூர் கிணத்து தவளாயக இருந்து பேரை எடுத்து கொள்ள கூடும்.


A P
ஜன 06, 2025 15:29

in India when to sing the national anthem, whether before starting a legislative Assembly meet or after the meet? இது நான் கூகுளிடம் கேட்ட கேள்வி. அதற்க்கு கூகுள் தந்த பதிலை படித்துவிட்டு, கவர்னர் செய்தது சரியா, அல்லது முதலமைச்சர் சொல்வது சரியா என்பது புரியும். இதோ, கூகுல் தந்த பதில். In India, the national anthem is traditionally sung before the start of a legislative assembly meeting. This practice is followed to show respect and patriotism before the proceedings . If you have any other questions or need more information, feel free to ask


HoneyBee
ஜன 06, 2025 16:51

நிறைய முரசொலி முட்டா கூட்டத்தில் இதுவெல்லாம் தெரியாது... அடிமைகள் குடிக்க கொடுத்தால் போதும். எதையும் உளரும


கூமூட்டை
ஜன 06, 2025 15:05

வருவது முன்பே என் மாடல் வாழ்க வளமுடன் அகண்ட என் மாடல்


புதிய வீடியோ