உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் பொறுப்பு அனாவசியமானது

கவர்னர் பொறுப்பு அனாவசியமானது

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் எம்.பி., சிவா பேசியதாவது; இன்னும் இரண்டு மாதங்களில், இந்தியாவின் தலையெழுத்து மாறப்போகிறது. கட்சியினர் உறக்கம் இன்றி உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி நம் வசம் ஆகும். ஓட்டுச் சாவடியில் இயந்திரங்கள் கோளாறு என்று சதி செய்வர். எது வந்தாலும், அதை முறியடிப்பது மக்கள் சக்தியாகும். சதிகளைக் கடந்து தி.மு.க.,வை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.இத்தனை ஆண்டுகளுக்குப் பின் பெரும் சோதனை வந்துள்ளது. அதை நாம் கடக்க வேண்டும். பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும்; இந்தியாவில் ஜனநாயகம் மலரச் செய்ய வேண்டும். மாநில அரசை இயங்கவிடாமல், கவர்னர் இடையூறு செய்கிறார். கவர்னர் பொறுப்பு என்பது அனாவசியமானது; நமக்கு தேவையில்லாததாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்




 ...

1 hour(s) ago  






அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை