உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னரின் தேநீர் விருந்து: அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

கவர்னரின் தேநீர் விருந்து: அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவர்னர் ரவி அழைப்பின்பேரில் அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் தேநீர் விருந்தில் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஒவ்வொரு சுதந்திர தினத்தன்று மாலையில் கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போதைய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று (ஆக.,15) தேநீர் விருந்து அளித்தார். இதற்காக, திமுக, அதிமுக, பா.ஜ., தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், முக்கிய அமைப்புகளுக்கும் கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார்.திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. ஆனால், திமுக கட்சி சார்பில் புறக்கணித்தாலும், அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாமக சார்பில் ஜி.கே.மணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.

அண்ணாமலையுடன் பேச்சு

விருந்தில் பங்கேற்க வந்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்களுக்கு மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு எழுந்து சென்று அண்ணாமலையின் கையை பிடித்துக்கொண்டு சிறிது நேரம் தனியாக பேசினார். அரசியலில் எதிரெதிராக இருக்கும் இரு கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேசியது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பேசும் தமிழன்
ஆக 16, 2024 08:46

அட கூமுட்டை கூட்டணி கட்சிகளா..... உங்களை போக வேண்டாம் என்று கூறி விட்டு.... அவர்கள் மட்டும் போய் இருக்கிறார்கள்.... ஆளுநர் அவர்கள் இனி திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பே கொடுக்க கூடாது.


ராமகிருஷ்ணன்
ஆக 15, 2024 22:15

அதென்ன கட்சி சார்பு, அரசியல் சார்பு. ஒரே டூபாகூர் தனமாக இருக்கே. வாயில் உள்ள வீரம் செயலில் இல்லையே. மத்திய அரசை பார்த்து பயந்து பம்முவது அப்பட்டமாக தெரியுது.


ஆரூர் ரங்
ஆக 15, 2024 22:03

இருவரும் என்ன பேசியிருப்பர்? ஒருத்தர் ஒண்ணும் புரியாமலேயே தலையை ஆட்டியபடி இருந்திருப்பார்.


Ms Mahadevan Mahadevan
ஆக 15, 2024 21:56

என்னமோ நடக்குது மர்ம மாக இருக்குது


Kundalakesi
ஆக 15, 2024 20:54

செந்தில் பாலாஜி வெளியே வருவார்


sankaranarayanan
ஆக 15, 2024 20:29

மத்தியில் திமுக பாஜாவுடன் சேர்ந்து மத்திய அமைச்சரவையில் விரைவில் பங்கு கொள்ளும்.முக்கியமான துறைகளை கேட்டு பெற்று மகிழ்ந்து பூரண ஆதரவு கொடுக்கப்படும் . தமிழகம் முன்னேறும்.இதுதானய்யா அரசியல் உள்நோக்கம்


Venkatasubramanian krishnamurthy
ஆக 15, 2024 20:19

இப்படியெல்லாம் ஒரு திராவிட மாடல். பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடக்கும்போது பொன்முடி புறக்கணித்தது எல்லாம் எந்த வகையிலானது? அரசு சார்பில் பொன்முடி கலந்து கொள்ள எது தடையாக இருந்தது? இனிமேல் கவர்னர் தேநீர் விருந்து அளவுகோல்படி பொன்முடி அரசு சார்பில் கலந்து கொள்வாரா? திராவிட நாக்கு ஏகப்பட்ட யூடர்ன் அடிக்கிறது.


V RAMASWAMY
ஆக 15, 2024 19:18

நீ அடிக்கற மாதிரி அடி, நான் அழுகிற மாதிரி அழுகிறேன். தேநீர் விருந்தில் பங்களித்தது போலும் இருக்கும், பங்களிக்காத மாதிரியும் இருக்கும். மக்களை மட்டையர்களாக்கிக்கொண்டே இருக்கும் இவர்களுக்கு வாக்களித்து பதவியில் வைக்கும் மக்களை என்னவென்று சொல்லுவது?


God yes Godyes
ஆக 15, 2024 19:04

திருவண்ணாமலை ஆள் பலே கில்லாடி.


நிக்கோல்தாம்சன்
ஆக 15, 2024 18:59

ஆணவத்தால் அழிந்தவர்களை கண்டுள்ளேன் , இங்கே ஒரு இனத்தையே அழிக்க ஆணவம் பூண்டிருந்தவர்களும் அழியும் காலம் வெகுவிரைவில் வருமோ?


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி