உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் தேநீர் விருந்து: காங்., - கம்யூனிஸ்ட் புறக்கணிப்பு

கவர்னர் தேநீர் விருந்து: காங்., - கம்யூனிஸ்ட் புறக்கணிப்பு

சென்னை: குடியரசு தினத்தன்று கவர்னர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.சென்னை கவர்னர் மாளிகையில் நாளை நடக்கும் குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி தி.மு.க. - அ.தி.மு.க. - பா.ஜ. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளன.தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறுகையில் ''சுதந்திரத்திற்காக போராடிய காந்தியை கவர்னர் அவமதித்து விட்டதால் அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்'' என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் கூறுகையில் ''காரல் மார்க்சை சிறுமைப்படுத்தி பேசியதுடன் தேசத் தந்தையாக ஏற்கப்பட்ட காந்தியையும் அவதுாறாக பேசியுள்ள கவர்னர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விருந்தை புறக்கணிக்கிறோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Rajarajan
ஜன 26, 2024 06:03

நொண்டிக்குதிரைக்கு சறுக்கியது தான் சாக்கு. இல்லனா மட்டும் நட்பா இருப்பாங்களா ஏன்னா ?? காந்தி காங்கிரஸ் கட்சியை கலைச்சிறலாம்னு கூடத்தான் சொன்னாரு. கலைச்சிட்டாங்களா என்ன ??


Sck
ஜன 26, 2024 05:37

சரி இரண்டு பிஸ்கட் அதிகமாக தர ஆளுநர் சொன்னால் தேநீர் என்ன சாக்கட தண்ணி விருந்து தரேன் சொன்னா போதும் மானங்கெட்ட கம்னாட்டிஸ்டுகளும், வெக்கங்கெட்ட காங்கிரஸ்காரனுங்களும் ஓடி வந்துடு வானுங்க.


Indhuindian
ஜன 26, 2024 05:23

இந்த மாதிரியெல்லாம் செஞ்சு வோ சி சொத்துவயிலே மன்னை அடைக்கறீங்களே


C.SRIRAM
ஜன 25, 2024 20:29

இந்த கட்சிகளுக்கு வெண்ணீரே கொடுக்க கூடாது . டீக்காசு மிச்சம்


யோகன்
ஜன 25, 2024 19:34

ஆமா இல்லாட்டி திமுக போடுற துண்டு பிஸ்கட் கிடைக்காதே!! அதான் இந்த வாலாட்டிகள் இப்படி வீலாட்டுது!!!


venugopal s
ஜன 25, 2024 16:21

தேநீர் விருந்தே தேவையில்லாத ஆணி!


RAMAKRISHNAN NATESAN
ஜன 25, 2024 21:09

திமுகவே தேவையில்லாத ஆணி .........


RAMAKRISHNAN NATESAN
ஜன 25, 2024 16:07

மகாத்மா காந்தி தேசப்பிதா அல்ல என்று யூ பி ஏ அரசின் சார்பிலேயே ஒரு மாணவிக்கு ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பில் தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது .... அதாவது அரசியல் சட்டப் பிரிவு 18(1) படி பாதுகாப்பு மற்றும் கல்வித்துறை தவிர வேறு பட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று அதற்கு விளக்கம் கூறப்பட்டது ..... ஆதாரம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு ..... உண்மை இப்படி இருக்க கவர்னர் நேதாஜிதான் தேசத்தந்தையாக இருந்திருக்க வேண்டும் என்று சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன ????


Narayanan
ஜன 25, 2024 15:51

தெரு கோணலாக இருக்கு ஆடமாட்டோம் . ஏதாவது காரணம் வேண்டும் . போங்களேன் வரவில்லையே என்று யாரும் வருந்தவில்லை .


Ravishankar
ஜன 25, 2024 13:48

இந்த ஆண்டின் முதல் சட்ட சபையில் நடக்க உள்ள துவக்க உரையையும் புறக்கணித்துவிடுங்கள். முடிந்தால் அரசியலை விட்டே ஒதுங்கி விடுங்கள். தமிழ் நாடு உருப்படும். வேங்கை வயல், நாங்குநேரி, பல்லாவரம் போன்ற பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காதவர்கள் அரசியலில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?


vbs manian
ஜன 25, 2024 13:29

இவர்கள் இல்லாத தேநீர் இன்னும் இனிக்கும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி