உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு 

19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு 

கோவை : செப்டம்பரில், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் நிலம் மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் சார்பில், ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது. சென்னை தவிர, மற்ற 37 மாவட்டங்களில் கண்காணிப்பு கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வில், கடந்த செப்டம்பரில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலுார், திருவாரூர், நாகை, சிவகங்கை ஆகிய 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ