32 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கடந்த மாதத்தை காட்டிலும் இம்மாதம்(டிசம்பர்) நிலத்தடி நீர் மட்டம் பரவலாக அதிகரித்து உள்ளது அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.நீர்வளத்துறையின்கீழ், நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் செயல்படுகிறது. இதன் சார்பில், ஒவ்வொரு மாதமும், நிலத்தடி நீர்மட்டம் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது. துறை சார்பில் சென்னை தவிர, மற்ற 37 மாவட்டங்களில், கண்காணிப்பு கிணறுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதன்படி நவ., மாதத்தை விட இம்மாதம் கோவை, நீலகிரி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்த மாவட்டங்கள் (உயர்வு, மீட்டரில்)திருவள்ளூர் -1.67காஞ்சிபுரம் -1.03செங்கல்பட்டு- 1.20விழுப்புரம்-2.20கடலூர்-1.70கள்ளக்குறிச்சி-3.14திருவண்ணாமலை-2.17ராணிப்பேட்டை-1.36வேலூர்-0.86திருப்பத்தூர்-4.06கிருஷ்ணகிரி-1.18தர்மபுரி-0.46சேலம்-0.06நாமக்கல்-0.06ஈரோடு-0.03திருப்பூர்-0.23கரூர் -0.27புதுக்கோட்டை-0.15திருச்சி-0.85பெரம்பலூர்-1.01அரியலூர் -1.17தஞ்சாவூர் -0.66திருவாரூர்- 0.84நாகை -1.05மயிலாடுதுறை-0.8திண்டுக்கல்-0.23தேனி-0.47சிவகங்கை -2.03ராமநாதபுரம்-0.99தூத்துக்குடி-0.53தென்காசி -0.30திருநெல்வேலி -0.54அக்., முதல் டிச., வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் அதிகளவு மழை பெய்த காரணத்தினால் இங்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள மாவட்டங்கள் (சரிவு, மீட்டரில்)நீலகிரி-0.06கோவை-0.04மதுரை-0.13விருதுநகர்-0.13கன்னியாகுமரி -1.03இம்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த போதிலும் நிலத்தடி நீர் மட்டம் உயராதது அப்பகுதி மக்கள், விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.