உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சார சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., வரி விலக்கு

மின்சார சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., வரி விலக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மின்சாதனம் இடமாற்றம் உள்ளிட்ட, 25 சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.தமிழக மின் வாரியம், புதிய மின் இணைப்பு வழங்கும் போது விண்ணப்ப கட்டணம், வளர்ச்சி கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கிய, ஒருமுறை செலுத்தக்கூடிய பல்வகை கட்டணம் வசூலிக்கிறது.பின், மின் பயன்பாட்டுக்கு, இரு மாதங்களுக்கு ஒரு முறையும் கட்டணம் வசூலிக்கிறது. மின் சாதனம் இடமாற்றம் உள்ளிட்ட பல சேவைகளுக்கு தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.மின் பயன்பாட்டு கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., கிடையாது.அதேசமயம், மின்சார சேவைகளுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டது. அதன்படி, தமிழக மின் வாரியமும், பல சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., வசூலித்து வந்தது.தற்போது, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரையை ஏற்று, விண்ணப்ப கட்டணம், மின் சாதனம் இடமாற்றம், மீட்டர் வாடகை, எரிந்த மீட்டரை மாற்றுவது, மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கட்டண விகிதம் மாற்றம் உள்ளிட்ட, 25 சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.இந்த உத்தரவு, கடந்த மாதம் 10ம் தேதி முதல், முன்கூட்டியே அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

narayanansagmailcom
நவ 03, 2024 07:35

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளும்


Kasimani Baskaran
நவ 03, 2024 06:38

மின்சாரம் வழங்குவது சேவை இல்லாமல் தர்மத்துக்கா நடக்கிறது? சேவை வரி என்பது அரசை போதிய நிதியாதாரத்துடன் இயங்க வகை செய்யும் ஓர் முக்கியமான உத்தி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை