உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜபாளையம் கோவிலுக்குள் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை

ராஜபாளையம் கோவிலுக்குள் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு காவலர்கள் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்ததாக தெரிகிறது. அவர்களை கோவில் காவலர்கள் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது, காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lok339c5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. வெட்டி படுகொலை செய்யப்பட்ட காவலர்கள் பேச்சிமுத்து,50, சங்கரபாண்டியன் ,65, என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவிலில் உண்டியல் சேதமாகி இருப்பதால் மர்மநபர்கள் கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.கோவிலில் பழமை வாய்ந்த சிலைகள், நகைகள் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து மதுரை சரக டி.ஐ. ஜி., அபினவ் குமார், எஸ். பி., கண்ணன் தலைமையில் போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தொடர்கிறது.இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி, பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.

இபிஎஸ் கண்டனம்

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோல், சென்னை மாநகராட்சி 196வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க, தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது? பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழத்தின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு முதல்வரே முழு பொறுப்பு. ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, போலீசாரை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் முதல்வர் தலைமையிலான அரசு தோல்வி அடைந்துள்ளது. கோவில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Nandakumar Naidu.
நவ 11, 2025 22:06

தமிழகம் கொலைக்களமாக மாறி விட்டது இந்த கேடு கெட்ட விளங்காத விடியல் ஆட்சியில். இவர்கள் செய்யும் பாவத்திற்கு இவர்கள் குடும்பம் மற்றும் பரம்பரை மண்ணோடு மண்ணாக அழிந்து போக வேண்டும்.


T.Senthilsigamani
நவ 11, 2025 19:10

வருத்தம் தரும் செய்தி . குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் தரப்படவேண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலுக்கு எதற்கு காவல் /பாதுகாப்பு காவலர்கள் என பேசிய திக கூட்டங்கள் இந்த விஷயத்தில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் . கடவுள் நம்பிக்கை உள்ள மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் .


kumaran
நவ 11, 2025 18:44

வெட்டு குத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குடிபோதையில் விபத்து ஊழல் குற்றச்சாட்டு தினமும் இப்படி பட்ட செய்தி கேட்டு மனம் பதைபதைக்கிறது ஒரு அரசின் நிர்வாக சீர்கேடுகள் அரசு மற்றும் அதிகாரிகள் தர்மம் ஒழுக்கம் பயிலவில்லை என்றால் ஒழுக்கமில்லாமல் அதர்மத்தை கைகொண்டால் அவர்கள் வாரிசு அதற்கான பயனை அடைவர் இதுவே நியதி


N S
நவ 11, 2025 16:54

"அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்ததாக தெரிகிறது.". எதோ அப்பாவிகள். திராவிட மாடல் அப்பாவின் வழிகாட்டுதல் படி, அறநிலையத்துறை அந்த உண்டியலை விட்டுவைத்திருப்பார்களா? காபி, டீ குடிக்க கூட அதில் ஒன்றும் இருந்திருக்காது


உண்மை கசக்கும்
நவ 11, 2025 16:24

ஒரு வெங்காயத்தையும் ஒருத்தன் கூட புடுங்க முடியாது. மீண்டும் அதே திருட்டு கும்பல் ஒரு வாக்குக்கு 10000 ரூபாய் கொடுத்து வெற்றி பெறுவார்கள். சிறுபான்மை வாக்கு 20 சதவீதம் வந்து விடும். அப்புறம் என்ன வெங்காய ஹிந்து ஒட்டு. போடா போடா புண்ணாக்கு.


Kasimani Baskaran
நவ 11, 2025 16:08

இராஜபாளையத்தை அடுத்த தேவதானம் என்றல் ஊரில் என்று இருக்க வேண்டும்.


Kasimani Baskaran
நவ 11, 2025 16:04

ஓட்டுப்போடவும், முட்டுக்கொடுக்கவும் அடிமைகள் இருக்கும் வரை திராவிடத்தை அசைத்துக்கூட பார்க்க முடியாது..


Anbarasu K
நவ 11, 2025 14:25

இரும்பு கரண் துரு பிடித்துவிட்டது என்ன செய்வது


Anbarasu K
நவ 11, 2025 14:24

இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டியது கொஞ்சம் தவற விட்டுவிட்டார் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் ஒடுக்கி விடுவார்


R.MURALIKRISHNAN
நவ 11, 2025 14:06

விரட்டியடிப்போம் திமுகவை வரும் தேர்தலில். தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றுவோம். ஏற்போம் இந்த உறுதி மொழியை உண்மை தமிழ் மக்களாகிய நாம்.


சமீபத்திய செய்தி