உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் நீதிபதிகளுக்கு விருந்தினர் இல்லம்

மதுரையில் நீதிபதிகளுக்கு விருந்தினர் இல்லம்

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளுக்கு, 12.9 கோடி ரூபாய் மதிப்பில், விருந்தினர் இல்லம் கட்டப்படவுள்ளது.உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு, 22,929 சதுர மீட்டர் பரப்பளவில், நான்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இங்கு, 24 நீதிமன்ற ஹால்கள் உள்ளன. இதுமட்டுமின்றி, நீதிபதிகள் சேம்பர், ஸ்டெனோ அறை, பார்வையாளர் அறை உள்ளிட்ட கட்டடங்களும், 15,209 சதுர மீட்டரில் உள்ளன. இதுதவிர, அனைத்து வசதியுடன், நீதிபதிகளுக்கான விருந்தினர் இல்லம் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. அதை ஏற்று, நீதிபதிகள் விருந்தினர் இல்லம் கட்ட, அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, 12.9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கட்டுமான பணிகளுக்கான முன்னேற்பாடுகளை, பொதுப்பணித் துறை துவங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை