உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொழி ரீதியாக ஹிந்துக்களை பிரிக்க தி.மு.க., முயற்சி எச்.ராஜா குற்றச்சாட்டு

மொழி ரீதியாக ஹிந்துக்களை பிரிக்க தி.மு.க., முயற்சி எச்.ராஜா குற்றச்சாட்டு

மதுரை: 'ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் முருகபக்தர்கள் மாநாட்டிற்கு வருவதற்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கலாமா. மொழியின் ரீதியாக ஹிந்துக்களை பிரிக்க பார்க்கிறார்கள்,' என, மதுரையில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.மதுரையில் அறுபடை வீடுகளின் அருட்காட்சியை எச்.ராஜா நேற்று பார்வையிட்டு கூறியதாவது: ரம்ஜான் விழாவில் கடைசி நேரம் வரை திருமாவளவன் குல்லா போட்டு கொண்டு இருக்கிறார். முருகன் கோயிலில் அவர் திருநீறை அழித்ததால் இதை கூற வேண்டிய நிர்பந்தம் வந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fsg4imhc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பழநி முருகன் மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி 'ஆன்மிக மாநாடு இல்லை' என்றார். அப்படி என்றால் அது நாத்திக, தி.மு.க., மாநாடு. முருகன் தமிழ் கடவுள் என்று கூறுபவர்கள் திருச்செந்துார் குடமுழுக்கிற்கு வருவார்களா. அரசியலில் தீயசக்திகள் இருந்தால், அதை அழிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் முருகபக்தர்கள் மாநாட்டிற்கு வருவதற்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கலாமா. மொழி ரீதியாக ஹிந்துக்களை பிரிக்க பார்க்கிறார்கள். அடுத்த 9 மாதங்களுக்கு ஹிந்துக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் தக்க பதிலடி தர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

கொங்கு தமிழன் பிரசாந்த்
ஜூன் 21, 2025 17:08

உண்மையான பிரிவினைவாதி யார் என்றால் H ராஜா என்று சிறு குழந்தைகூட சொல்லும் அளவிற்கு இருக்கிறது இவருடைய 35 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை.


தஞ்சை மன்னர்
ஜூன் 21, 2025 13:05

ஹிந்துக்களை உலகமக்களிடம் இருந்து பிரித்து அல்ல யார் முயற்சிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் திரியும் , யூத கூட்டம் இப்படித்தான் மமதையில் தெரிந்தது எங்களை போன்று யாரும் அறிவிலிகள் இல்லை என்று இப்போது தெரிந்து இருக்கும் , இப்படி சொல்லி சொல்லி இந்தியர்களை போகும் இடத்தில அவர்களின் முந்தைய மரியாதையை குறித்து இப்போது பாருங்கள் எப்படி பார்கிறார்கள் என்று


Karthik Madeshwaran
ஜூன் 21, 2025 13:00

இவரு ஒரு காமெடி பீஸ். இவரு சொல்றத இவரு கட்சியே கேட்காது, அதனால தான் கட்சியில இன்னும் டம்மி பீசா இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்படி கேட்பார்கள். ? ம்ம்ம் அடுத்த நியூஸ் பாப்போம்.


தஞ்சை மன்னர்
ஜூன் 21, 2025 11:33

உன் போன்ற ஆர் எஸ் எஸ் அடிவருடிகளால்தான் இந்தியா இரண்டாக பிரிந்து போக காரணம் ஆங்கிலேயர்கள் நினைத்தை முடித்து கொடுத்த சங் பரிவார் கூட்டம்


Mettai* Tamil
ஜூன் 21, 2025 13:02

அப்ப காந்தி நேரு ஜின்னா இவங்களெல்லாம் RSS ன்னு சொல்றீங்க ...


தஞ்சை மன்னர்
ஜூன் 21, 2025 13:22

வட இந்தியர்கள் தமிழ் கற்று கொள்ளுவது எங்களுக்கு பெருமைதான்


தஞ்சை மன்னர்
ஜூன் 21, 2025 11:31

இந்த கொசு தொல்லை வேறு யாரவது மருந்து அடிச்சி விடுங்கப்பா , எப்ப ஹரி ஹாரா ராஜ சர்மா நீ உங்கப்பா எங்கேர்ந்து வந்தாரோ அங்கேயே போய்விடு தாமிழக பி சே பி பிழைத்து கொள்ளும்


ஆரூர் ரங்
ஜூன் 21, 2025 15:21

அவருடைய தாத்தா தஞ்சை சாலியமங்கலததிலிருந்து காரைக்குடி க்கு வந்தவர். பாலைவன அரேபியாவிலிருந்து அல்ல.


தஞ்சை மன்னர்
ஜூன் 21, 2025 16:54

அடேங்கப்பா ஹரி ஹர ராஜா சர்மா என்ற பிகாரி பற்றி சொன்னால் என்ன கோவம் வருது


J.Isaac
ஜூன் 21, 2025 10:39

முதலில் மும்மொழியாகிய ஒழுக்கம், நேர்மை, உண்மை கற்று கொடுங்கள். கற்றால் தான் வரும். பார்த்தால் வராது


Svs Yaadum oore
ஜூன் 21, 2025 11:43

அதெல்லாம் ஏற்கனவே திராவிடனுங்க கற்று கொடுத்து விட்டார்கள் ....தமிழ் நாடு ஏற்கனவே படித்து முன்னேறிய மாநிலம் ...தமிழ் நாட்டை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் ....


Mettai* Tamil
ஜூன் 21, 2025 13:07

ஒழுக்கம், நேர்மை, உண்மை...ஓ இதுதான் மும்மொழியா..இதைத்தான் காமராஜர் கிட்டருந்து பிடுங்கி கத்து கொடுத்திட்டு இருக்காங்களா ?


முருகன்
ஜூன் 21, 2025 10:04

மொழி பிரச்சினை இல்லை பவன் கல்யாண் பேச்சு அளவுக்கு மீறி உங்கள் கட்சி உறுப்பினர் மாதிரி பேசுவது தான் பிரச்சினை.


GMM
ஜூன் 21, 2025 09:30

சாதி, மொழி ரீதியாக தமிழக இந்துக்களை அதிகம் திராவிடர் பிரித்து விட்டனர். இந்து சாதி இட ஒதுக்கீடு அதிகரிப்பு, மத இட ஒதுக்கீடு அறிமுகம், சாதிக்கு உள் ஒதுக்கீடு போன்ற ஏராள குழப்பம். குடும்பம் உள் புகுந்து சட்ட மோதலை அதிகரித்து பெற்றோர், பிள்ளைகளை தனிமரம் ஆக்கி விட்டனர். சாதாரண பாகப்பிரிவினையை சாகும் வரை பிரிக்க முடியாத நிலை ஆகிவிட்டனர். திராவிட கட்சியில் உள்ள இந்துக்கள் அடுத்த தலைமுறையை கலாச்சாரம் , மதம், குணம் மாறாமல் பார்க்க முடியாது. இந்து மதம் மீது அவ்வளவு வன்மம். ஒரு நல்ல செய்தி வரும். ?


புரொடஸ்டர்
ஜூன் 21, 2025 09:02

ஹெச்.ராஜா சொல்லி இருப்பதை அவர் உறுப்பினராக உள்ள பாஜக பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருவதை தமிழ்நாடு மக்கள் அனைவரும் அறிவார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 21, 2025 11:16

H ராஜாவின் குலதெய்வ ஆலயத்தில் பூஜை செய்பவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்.


V RAMASWAMY
ஜூன் 21, 2025 08:59

முதல்வருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் தமிழ்நாடு பாகிஸ்தானின் ஒரு அங்கம் என்கிற நினைப்போ?


சமீபத்திய செய்தி