உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரை மனதோடு அமைக்கப்பட்ட கூட்டணி: திருமாவளவன் பேட்டி

அரை மனதோடு அமைக்கப்பட்ட கூட்டணி: திருமாவளவன் பேட்டி

சென்னை: ''பா.ஜ., கொடுத்த நெருக்கடியின் விளைவாக அரை மனதோடு அமைக்கப்பட்ட கூட்டணி'' என திருமாவளவன் தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qcsry2yb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அ.தி.மு.க., மீது பா.ஜ., சவாரி செய்யத்தான் கூட்டணி அமைத்திருக்கிறது. அ.தி.மு.க., தலைமையில் கூட்டணியா? பா.ஜ., தலைமையில் கூட்டணியா என்ற சந்தேகம் எழுகிறது. அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி என்றால் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தான் அறிவித்து இருக்க வேண்டும்.பா.ஜ., கொடுத்த நெருக்கடியின் விளைவாக அரை மனதோடு தான் இந்த கூட்டணியை அவர் அமைத்திருக்க முடியும் என கருதுகிறேன். தமிழகத்தில் பா.ஜ.,வால் தனித்து நிற்க முடியாது. அவ்வாறு தனித்து நின்றால், அவர்கள் ஒரு சக்தியே இல்லை என்பதை தமிழக மக்கள் உணர்த்தி விடுவார்கள். அ.தி.மு.க. வாக்கு வங்கியை தங்கள் வாக்கு வங்கியாக காண்பிப்பதற்கு பா.ஜ.., யுக்தி. சதி வலையில் அ.தி.மு.க. சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.,உடன் இணைய வாய்ப்பில்லை என பழனிசாமி நிபந்தனை விதித்து இருப்பார். பொன்முடியின் பேச்சிற்கு முதல்வர் ஸ்டாலின் தக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறார். துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக்கி இருக்கிறார். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

NIyayanidhi
ஏப் 13, 2025 22:39

அது அரையா இருந்தா என்ன? முழுசா இருந்தா என்ன? உமக்கென்னையா அவ்வளவு அக்கறை?


Lkanth
ஏப் 13, 2025 17:42

ஒரு ஊபி . பாஜகவில் கூட்டணியில் சேர்ந்து 10 சீட் கொடுக்கிறேன் என்று சொன்னால்பாஜக ஊபி ஆகிவிடுவார்


NATARAJAN R
ஏப் 13, 2025 15:16

அதிமுக யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? பாஜக தமிழ் நாட்டில் கால் பதிக்க முடியாது நன்று ஏறத்தாழ 25 வருடமாக தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரே தலைவர் என்று சொல்லி வரும் நீங்கள் ஒரே ஒரு தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டிவிட்டு பிறகு மற்ற கட்சிகளை பற்றி பேசலாம். கடந்த 4 வருடமாக திமுக ஆட்சியில் நடந்த எந்த மக்கள் பிரச்சினைகளுக்கும் வாய் திறக்காமல் மௌனம் காத்து நிற்கும் நீங்கள் எந்த கட்சியையும் விமர்சனம் செய்யும் தகுதி இல்லை.


Thiyagarajan S
ஏப் 13, 2025 14:10

உங்களுடைய கூட்டணியில் உங்களுக்கு உட்காருவதற்கு நாற்காலி கூட கொடுக்கவில்லை திருமா அவர்களே


Bhaskaran
ஏப் 13, 2025 08:29

நீ திமுக கூட்டணி யில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாய் போலிருக்கோ


RAMESH
ஏப் 13, 2025 08:05

எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு கூட்டணி அமைத்து இருக்கும் நபர்கள் பேசக்கூடாது. கூட்டணி பற்றி தனியாக நின்றால் காணாமல் போகும் திருமா காங்கிரஸ் வைகோ உண்டியல் பயல்கள் பேசக் கூடாது


Mani Auto
ஏப் 13, 2025 15:24

அற்புதம்


Swaminathan S
ஏப் 13, 2025 07:00

பால் மாறலாம்னு நினைத்து கொண்டு இருந்திருப்பாரு. அதுக்கு வழி இல்லாம போயிடுச்சு.


Swaminathan S
ஏப் 13, 2025 06:56

பால் மாறலாம் னு பார்த்திருப்பாரு. ஆனா என்ன செய்யறது? பிஜேபி அதிமுக கூட்டணி உறுதி ஆயிடுச்சு. வட போச்சே அப்படிங்கறாரு. எல்லாம் பொட்டி கணக்குதான். அந்த வயித்தெரிச்சல்தான். என்ன செய்யறது? இதான் இப்ப அரசியல். பாவம் ?


Anantharaman Srinivasan
ஏப் 12, 2025 23:37

ஆதவ் அர்ஜூனா விலகி விஜயுடன் ஓட்டிக்கொண்டதின் மர்மம் என்ன..? தேர்தல் நேரத்தில் கிளை தாவும் திட்டமா.?


Kanishka Jothida Nilayam Kanishka Jothida Nilayam
ஏப் 12, 2025 21:48

நல்ல கூட்டணி தானே சாமி இந்திய இந்திய அனைவரும் ஒன்று சேர நல்லது நடக்கட்டும்


புதிய வீடியோ