உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா விஜய்?

சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா விஜய்?

தற்காலிக வெற்றி பெற்று ஆட்சியமைத்த த.வெ.க., அரசு, இந்த ஆறு மாதங்களில் புதுமையாக எதுவுமே செய்யவில்லை. கடந்த ஆட்சியில் என்ன நடந்ததோ அதே தான் தொடர்கிறது. அரசு ஊழியர்கள் போராடி கொண்டிருக்கின்றனர். அரசு குறித்து அவர்கள் கருத்து சொல்லக்கூடாது என கூறுவதன் வாயிலாக, கருத்து சுதந்திரத்தை பறிக்கும் சர்வாதிகாரியாக முதல்வர் விஜய் மாறிவிட்டாரா? காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் துன்பத்தில் உள்ளனர். காங்., ராகுல் வாயிலாக கர்நாடக முதல்வரிடம் பேசி, குறைந்தபட்சம் 15 டி.எம்.சி. நீரையாவது பெற்றிருக்க வேண்டும். அதை செய்யாத முதல்வர், ஆந்திராவிற்கு ஏன் சென்றார்? ‘இன்னும் 6 மாதம் காலம் கொடுங்கள். அதற்குள் சென்னையில் மழைநீர் வடிகால்களை சீர்படுத்தி விடுவோம்’ என்கிறார் ஓர் அமைச்சர். அரசின் இயலாமையை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். – செல்லுார் ராஜூ கேள்வி முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை