உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளிக்கு மறுநாள், நவ.,1ம் தேதி அரசு விடுமுறை; அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்.31ம் தேதி வருகிறது. பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் மக்கள், புது துணிகள், நகைகள் என வாங்கி வருகின்றனர். தீபாவளிக்கு மறுநாள் வெள்ளி அனைவருக்கும் பணி நாளாகும். https://www.youtube.com/embed/uJrn8Vdmj4Yபல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு அதற்கு மறுநாளே அலுவலகம் வர முடியாத நிலை உள்ளது. இதனால் பணிநாளான வெள்ளியன்று அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு இருந்தது. அதை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு தீபாவளியை அக்.,31ம் தேதி அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ.,9ம் தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

என்றும் இந்தியன்
அக் 19, 2024 17:45

ஏன்டா காலையில் எழுந்தாய் ???காலையில் சூரியன் உதிக்கின்றது ஆகவே நான் எழுந்தேன்??அப்போ 6 மணிக்கு சூரியன் மறைகின்றது என்ன நீ தூங்க செல்வதில்லை???பதில் இல்லை தற்கு??? இதை போல இருக்கின்றது தமிழக அரசு அறிவுப்பு. வேடிக்கை என்னவென்றால் எல்லா வட - இந்தி பேசும் - மாநிலங்களில் 1 ஆந்தேதி தான் தீபாவளி விடுமுறை. ராமர் ராவணனை ஜெயித்துவிட்டு முதலில் தமிழ்நாடு இப்போதைய டாஸ்மாக்கினாடு கால் வைத்த பகுதி பிறகு அதாவது ஒரு நாள் கழித்து அயோத்தியா வந்தடைந்தார் என்கின்றது ராமாயணம். இந்தியை எதிர்க்கும் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இதை எப்படி இந்தி மாநில வழியில் செய்கின்றது???


அப்பாவி
அக் 19, 2024 16:57

எதுக்கு பொது விடுமுறை புண்ணாக்கு எல்லாம்? எல்லோரும் தீபாவளிக்கு சொந்த ஊர் போவதில்லை. விருப்பப்பட்டவர்கள் லீவு எடுத்துக்கொள்ளலாம்னு வருஷத்தில் ரெண்டு நாள் குடுத்திரலாம். இதையே மூத்த பண்டிகைஜளுக்கும்.குடுப்பாங்களா? இவிங்கதான் வேலை செய்யமாட்டாங்க. அடுத்தவனையும் வேலை செய்ய உடாம கெடுப்பாங்க. பேசாம இந்த அசு விடுமுறை நாட்களையே எடுத்திட்டு, வருஷம் 10 நாள் லீவு அபப்போ எடுத்துக் கொள்ளுங்கள்னு சொல்லி எல்லா நாளையும் வேலை நாளாக அறிவிக்கலாம்.இந்துக்களுக்கு பக்ரீத் எதுக்கு? முஸ்லிம்களுக்கு பொங்கல் எதுக்கு? கிறிஸ்துவர்களுக்கு தீவாளி எதுக்கு? கொத்தடிமைகளுக்கு சுதந்திர தினம் எதுக்கு? குடிகாரனுக்கு காந்தி ஜெயந்தி எதுக்கு?


raja
அக் 19, 2024 15:28

பகுத்தறிவு புண்ணாக்கு எல்லாம் பல் இளித்து விட்டது ...


Kumar Kumzi
அக் 19, 2024 15:17

கஜாவை நிரப்ப டாஸ்மாக் டார்கெட்டுக்கு அடிபோடுறான்


RAMAKRISHNAN NATESAN
அக் 19, 2024 15:09

தீபாவளிக்கு மறுநாள் - அதாவது வெள்ளிக்கிழமை - அமாவாசை ...... விக்கிரக வழிபாட்டாளர்களுக்கு சென்டிமென்ட்டாக அன்றுதான் தீபாவளி ......


sundarsvpr
அக் 19, 2024 15:00

தீபாவளி வாழ்த்து கூற தயங்குவது ஸ்டாலின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு. இதனை சரிக்கட்ட ஹிந்து பண்டிகைக்கு மறுநாள் விடுப்பு. ஆனால் பாவப்பட்டவர்கள் அரசு சாராய கடை பணியாட்கள்.


வைகுண்டேஸ்வரன்
அக் 19, 2024 14:58

அடேய் வாசகர்களா, உங்களுக்கு என்ன தாண்டா பிரச்னை? லீவ் விட்டாலும் கதறறீங்க. நோ லீவ் னாலும் கதறுவீங்க. வாழ்த்துக்கள் சொல்லல ன்னு கதறுவீங்க. ஏன் ஸார், உங்க சொந்தக்காரன் அல்லது ஆபீஸ் கலீக் ஒருத்தன் விஷ் பண்ணலை ன்னா அதைப் போய் வெளிய சொல்லிக்கிட்டிருப்பீங்களா? ஏன் நீ விஷ் பண்ணல ன்னு கேப்பீங்களா? விஷ் பண்ணலைங்கறதுக்காக நீங்கள் பண்டிகை கொண்டாட மாட்டீங்களா?


என்றும் இந்தியன்
அக் 19, 2024 17:57

குழந்தாய் அனாவசியமாக ரூ 200 உபிஸ் போல கதறாதே ???முதல்வர் என்பவர் முஸ்லீம் /கிறித்துவ சமுதாயத்திற்கான முதல்வர் அல்லவே அல்ல அவர் டாஸ்மாக்கினாட்டின் 8.2 கோடி இந்து முஸ்லீம் கிறித்துவ மததவறை காக்கும் முதல்வர். முதல்வர் என்பவர் மத எல்லைகளை தாண்டி எல்லோருக்கும் நல்லது செய்வதில் முதல்வர் தான் முதல்வர் இல்லை என்றால் வீதியில் திரியும் ஒருவன் அவன் நினைத்ததை தான் அவன் செய்வான்


Mohamed Rafeek
அக் 19, 2024 14:20

Better give 12 days leave from 31-10-2024 to 10-11-2024


RAAJ68
அக் 19, 2024 13:45

முதல் நாளும் லீவ் வேண்டும். அப்ப தானே தீபாவளிக்கு. ஒரு நாள் முன்னாடியே ஊருக்கு போய் சேர முடியும். தீபாவளிக்கு முதல் நாள் evening வரை வேலை முடிந்து எப்ப வீட்டுக்கு போய் எப்ப kiilambi எப்ப ஊர் போய் சேருவது. தொலை தூரம் pokiravar மறு நாள் காலை deepavali முடிந்த பின்பு தான் வீட்டுக்கு போவான்.


M Ramachandran
அக் 19, 2024 13:27

இதை காட்டி வேறு மதத்தினர் கண்டா மேனிக்கு விடுமுறைய கேட்டு நெருக்கடி கொடுப்பார்கள். கைய்யாய்ய்ய கட்டிகொண்டு சாலாம் போட வேண்டிய நிலைக்கு உள்ளாகி விட்டார்


Venkateswaran Rajaram
அக் 19, 2024 14:12

வேறு மதத்தினருக்கு கேட்காமலேயே விடுமுறை கொடுத்துவிடுவார்கள் ....புரிந்துகொள்ளவும்


ஆரூர் ரங்
அக் 19, 2024 16:18

அரேபிய முஸ்லிம்களே அனுசரிக்காத மீலாடி நபிக்கு இங்கு மட்டும் விடுமுறை விடுகிறார்களே. அங்குதான் வாக்குவங்கி விளையாடுது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை