உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வராக்க தயார் என சொன்னார்: நயினார் நாகேந்திரன்

முதல்வராக்க தயார் என சொன்னார்: நயினார் நாகேந்திரன்

மதுரையில் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அளித்த பேட்டி: மத்திய அமைச்சர் அமித் ஷா, நம் கூட்டணி சார்பில், தமிழக முதல்வர் வேட்பாளராாக யாரை அறிவிக்கிறாரோ, அவருக்காக வேலை செய்ய தயார் என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஒரு காலத்தில் பேசினார். தமிழகத்தில், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் எங்கள் அனைவரின் நோக்கம். ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்தால் லட்சியம் நிறைவேறும். இதை தவிர்த்து விட்டு சூழ்நிலை காரணமாக வெளியேறினால், அதற்கு நான் பொறுப்பில்லை. சாதாரணமாக ஒரு குடும்பத்திலேயே எவ்வளவு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த விஷயத்தில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க நான் தயார். அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். பிரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட அ.தி.மு.க., உருவாக வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர், கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Krishnamurthy Venkatesan
செப் 08, 2025 13:57

நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரு முன்னாள் அதிமுக தொண்டர், உறுப்பினர், MLA, அமைச்சர். அதனால்தான் அதிமுவில் எல்லோரும் ஓன்று சேர வேண்டும் என சொல்கிறார் போலும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 09, 2025 03:26

பாஜாக்காவை உதறிவிட்டு ஆடீம்காவில் மீண்டும் ஐக்கியமாகலாமே


ஜெய்ஹிந்த்புரம்
செப் 08, 2025 09:33

அண்ணாமலைக்கும் உங்களுக்கும் இடையில் நடக்கும் உள்குத்து அடிதடி சண்டை பற்றி இபிஎஸ் மேடையில் பேசினால் எப்படி இருக்கும்? கதறல் காது கிழிந்து விடும் அல்லவா?


VENKATASUBRAMANIAN
செப் 08, 2025 08:46

இவர் எதற்காக திமுக உட்கட்சி பற்றி பேசுகிறார். ஊடகங்கள் இவரை கேள்வி கேட்டு மடக்குகிறார்கள். இதற்கு பலியாகிறார். இதுதான் ஆர்எஸ்பாரதி ஊடகங்களின் குறிக்கோள். அப்போதுதான் பிரேக்கிங் நியூஸ் போடலாம்.


pakalavan
செப் 08, 2025 07:10

எப்படியோ அதிமுக என்ற கட்சிய பஜக காரனுங்க அழிச்சுட்டானுங்க


Kanns
செப் 08, 2025 09:11

Every People except Fools Know that post Jaya ADMK Will Sink & Desinte grate Without Anybody


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை