உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளஸ் 2 தேர்வு அறையில் மொபைல் போன்; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

பிளஸ் 2 தேர்வு அறையில் மொபைல் போன்; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்; திருப்பூர் அருகே பிளஸ் 2 தேர்வு அறையில் மொபைல்போனை பயன்படுத்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு; திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு அலுவலராக ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் இருந்தார்.கடந்த 11ம் தேதி தேர்வு அறையில் அவர் மொபைல்போன் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அதில், தலைமை ஆசிரியர் தாமோதரன் 3 மொபைல்போன்களை கொண்டு சென்றதும், அதை தேர்வு அறையில் பயன்படுத்தியதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Padmasridharan
மார் 18, 2025 10:18

இதேபோல் வேலை செய்யும் சமயத்தில் மொபைல் போன் பயன்படுத்தும் காவல்துறையினரை Suspend / Transfer / Dismiss செய்யமுடியுமா. ஒரு ஆசிரியரின் பங்கு பள்ளிக்கூடத்தில் எவ்வளவோ, காவல் அதிகாரிகளின் பங்கும் அவ்வளவே சமூகத்தில்


Barakat Ali
மார் 18, 2025 10:17

அந்த ஹெச் எம் ஐ க்கூட என்கவுண்ட்டர்ல போடலாமே? நாடு கெட்டு கூட்டிச்செவுரு ஆயிருச்சு ....


raja
மார் 18, 2025 08:31

இப்போ இவந்தான் செல் போன் உபயோகிக்க வில்லை இவர் என்னமோ தேர்வெழுத சென்று போனை பார்த்து எழுதினார் போல் துண்டு சீட்டை பார்த்து பிட் அடிக்கும் அரசு சொல்கிறது.. இதன் காரணமே வேறு.. இவர் ஜாக்டோ ஜியோவில் தீவிரமாக இறங்கி துண்டு சீட்டை பார்த்து பிட் அடிக்கும் அரசுக்கு குடைச்சல் தந்திருப்பார் அதனால் பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடும்...அதற்குள் ஒரு கொத்தடிமை மங்கை கங்கை என்று உருட்டுது....


R S BALA
மார் 18, 2025 07:56

இந்தாளு இவ்வாறு செய்த காரணத்தால் அந்த தேர்வு அறையில் எழுதிய அத்தனை மாணவர்களையும் சந்தேகத்திற்கு இடமாக்கி பாதிப்புக்குள்ளாக்கிவிட்டார் நன்றாக படித்து உண்மையாக எழுதிய மாணவர்களும் மனஉளைச்சலாகி வாழ்க்கை தடமே மாறும் அளவிற்க்கு இது சென்றுவிடும்.


Ray
மார் 18, 2025 07:47

மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கி நலம் பெறலாம் கங்கையே சூதகமானால்? தற்காலிக பணிநீக்கம் நல்லது அடுத்து சூட்டோடு சூடாக குற்ற வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ள விரைவான நடவடிக்கைகள் தேவை தாமதம் கூடாது. விரைவான மேல் நடவடிக்கைகளே இந்தப்போன்ற குற்றங்களுக்கு தீவிரமான நடவடிக்கை பாயுமென்ற எச்சரிக்கை சேரவேண்டியவர்களுக்கு போய்சேரும். ஆறப்போட்டால் ஆங்காங்கே பல நிலைகளிலும் கையூட்டு விளையாடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை