உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 97 சதவீத மக்களிடம் கொரோனா எதிர்ப்பு சக்தி; சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

97 சதவீத மக்களிடம் கொரோனா எதிர்ப்பு சக்தி; சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

சென்னை:தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக, 97 சதவீதம் பேரிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக, பொது சுகாதாரத் துறை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறித்து, பொது சுகாதாரத் துறை ஆய்வு நடத்தி வருகிறது. அதன்படி, கொரோனா பரவல் துவங்கியபோது, 32 சதவீதமாக இருந்த நோய் எதிர்ப்பு சக்தி அளவு, தற்போது, 97 சதவீதமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.கொரோனா தடுப்பூசி, உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு முறையால் நோய் சக்தி அதிகரித்துள்ளதாக, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில், 'ஒமைக்ரான்' வகை கொரோனா பாதிப்பு தான் உள்ளது; இது வீரியமற்றது; உயிர் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது இல்லை. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு, மூன்று நாட்களில் குணமடைந்து விடுகின்றனர்.இந்தாண்டு கொரோனா நோய் பாதிப்புகளுக்கான தீவிர தன்மை குறித்து கண்டறிய, பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 1,214 முதியவர்களின் ரத்த மாதிரிகள் எடுத்து, பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில், 97 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே, ஒமைக்ரான் போன்ற வீரியமற்ற கொரோனா, அவர்களை பெரியளவில் பாதிக்காது.எனினும் கொரோனா பாதிக்காது என கூறவில்லை. முதியோர், இணை நோயாளிகள், கர்ப்பிணியர் ஆகியோர், பொது இடங்களுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அளவு

ஆய்வு - ஆண்டு - நோய் எதிர்ப்பு சக்திமுதல் கட்டம் - 2020 அக்., - 32 சதவீதம்2ம் கட்டம் - 2021 ஏப்., - 29 சதவீதம்3ம் கட்டம் - 2021 ஆக., - 70 சதவீதம்4ம் கட்டம் - 2021 டிச., - 87 சதவீதம்5ம் கட்டம் - 2025 ஏப்., - 97 சதவீதம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anbuselvan
ஜூன் 12, 2025 09:25

அப்போ மோடி அவர்களின் தலைமையில் ஒன்றிய அரசு கொரோனா காலத்தில் செலுத்திய கோவிஷில்ட் எதிர்ப்பு மருந்து நன்கு வேலை செய்கிறது என்பதை தமிழக அரசு ஒப்பு கொள்கிறது போலும்.


Thravisham
ஜூன் 12, 2025 08:42

சமீபத்தில் சீனா சென்றிருந்தேன், பெரும்பாலான மக்கள் மாஸ்க் அணிகின்றனர். இந்தியாவில் அப்படியில்லை. மூல காரணம் மஹான் மோடியின் கொரன தடுப்பூசி திட்டம்தான். வாழ்க எம்மான் மோடி


Mani . V
ஜூன் 12, 2025 03:58

எல்லாம் நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ஓவாயால்தான்.


புதிய வீடியோ