உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதை கேட்டால் சிரிப்பு தான் வருது; சொல்கிறார் ஸோகோ ஸ்ரீதர் வேம்பு

இதை கேட்டால் சிரிப்பு தான் வருது; சொல்கிறார் ஸோகோ ஸ்ரீதர் வேம்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நான் அரசியலுக்கு வருவதாக பரவும் செய்தி நகைப்புக்குரியது. எனக்கு அரசியலுக்கு வர நேரமில்லை என ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட, சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான 'ஸோகோ'வின் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வை தீவிரப் படுத்துவதற்காக நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்க உள்ளார்.இந்நிலையில், அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நான் அரசியலுக்கு வருவதாக, ஒரு செய்தி பரவி வருவதாக கேள்விப்பட்டேன். இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது. நான் அரசியலுக்கு வருவதாக பரவும் செய்தி நகைப்புக்குரியது; அதற்கான எந்த வழியும் இப்போது இல்லை. அடுத்த வாரம் ஆஸ்டினில் உள்ள தொழில்துறை ஆய்வாளர்கள் குழுவிற்கு AI பற்றிய எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை பேசுவதற்கு நான் கடுமையான முயற்சி உடன் தயாராகி வருகிறேன். நான் அங்கு செல்வேன். தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் எனக்கு இப்போது மிகவும் சவாலான சூழல் இருக்கிறது. எனக்கு நேரமும் இல்லை; நான் அரசியலுக்கு வருவது குறித்து யாரிடமும் இதுவரை எந்த விவாதமும் நடத்தவில்லை. அதை இந்த பதிவு தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன். மீண்டும் வேலைக்குச் செல்லுங்கள். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.அவரது பதிவில் கமெண்ட் செய்துள்ள தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை, 'நமது நாட்டு மக்களின் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கும், தொழில்நுட்ப மாற்றத்தை எளிதாக்குவதற்கும் உங்கள் திறமை பாதுகாக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

திகழ்ஓவியன்
ஜன 30, 2025 13:30

உனக்கு உன் மனைவியே ஓட்டு போடமாட்டா


N Sasikumar Yadhav
ஜன 30, 2025 14:36

உன்னுடைய மனைவி மட்டும் போடுவாரா


Barakat Ali
ஜன 30, 2025 14:54

This is the quality of Dravidian model.


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
ஜன 30, 2025 17:12

ஏலே தற்குறி திடல் ஓவியா, அறிவாலய அடிமையே உன் ஐந்தறிவு புத்தியை இங்கே வெளிக்காட்டி அசிங்கப் படாதே..


அப்பாவி
ஜன 30, 2025 13:01

அரசியலுக்கு வந்து தமிழைசைக்கு போட்டியா வந்துறப் போறீங்க.


Ramesh Sargam
ஜன 30, 2025 12:58

உங்களைப்போன்று அதிகம் படித்தவர்களுக்கும், திறமைசாலிகளுக்கும் அரசியல் வேண்டாம். அரசியல் ஒரு சாக்கடை.


Sivagiri
ஜன 30, 2025 12:53

ஆமா ஆமா - அப்புறம் நீட்டா ஷேவ் பண்ணி , டை அடிக்கணும் , மேக்அப்-லாம் பண்ணனும் கெட்ட வார்த்தையெல்லாம் ஞாபகம் வச்சு பேசணும் - யாருக்கும் புரியாத பாஷைல பேசணும் , அதோட காலில் விழ தெரிஞ்சிருக்கணும் , பப்ளிக்காவும் / ரகசியமாவும் - -


மோகனசுந்தரம் லண்டன்
ஜன 30, 2025 12:47

திடீர்னு குறுக்க மறுக்க ஓடிக் கொண்டிருக்கும்.


KRISHNAN R
ஜன 30, 2025 11:08

வேண்டவே வேண்டாம்


K.Ramachandran
ஜன 30, 2025 11:02

He can become a Rajya Sabha MP very easily if he wants to contribute to politics.


Madras Madra
ஜன 30, 2025 10:50

அரசியல் சினிமா சீரியல் குடி பிரியாணி இதை தவிர எங்களுக்கு வேற ஒன்னும் தெரியாது எசமான்