உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை; உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு

முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை; உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுகிறது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அக்.,1 முதல் இன்று வரையில் வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட 58 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதாவது, 95 மில்லி மீட்டர் மழை பெய்யும் நிலையில், 150.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, சென்னையில் 23 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதேவேளையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இந்தாண்டில் மட்டும் 7வது முறையாக அணை நிரம்பியது. விநாடிக்கு 10,374 கனஅடியில் இருந்து 14,420 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,000 கனஅடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பிறகு, 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட இருக்கிறது. அதேபோல, தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை, 69 அடியை எட்டியுள்ளது. இதனால், விநாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது நீர்மட்டம் 101.36 அடியை எட்டியுள்ளது. 102 நீர்மட்டத்தை எட்டினால், அணையில் இருந்து தற்போது அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை 5 ஆயிரம் கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்த்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், பவானிசாகர் அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சங்கராபரணி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள 32 அடி கொள்ளளவு கொண்ட வீடூர் அணை நீர்மட்டம் 29 அடியை எட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V GOPALAN
அக் 20, 2025 21:32

70 சதவிகித தண்ணீர் கடலுக்கு சென்று உப்பு நீர் குடி நீராக மாறுகிறது


திகழ்ஓவியன்
அக் 20, 2025 18:59

தூயவர்கள் ஆட்சியில் இப்படி 5 முறை dam நிரம்புகிறது , தீயவர்கள் உள்ளத்தில் வெள்ளம் வாராத என்று ஆவல் பெருக்கெடுக்கிறது


Vasan
அக் 20, 2025 18:16

கடந்த 4 1/2 ஆண்டு கடின உழைப்பின் காரணமாக தமிழகம் மின் மிகை மற்றும் நீர் மிகை மாநிலமாக உள்ளது. There is Surplus in whatever we suffered previously.


ஆரூர் ரங்
அக் 20, 2025 19:46

பாதியளவு மின்சாரம் வேற்று மாநிலங்களிலிருந்து( நிறைய யூனிட் 14 ரூபாய்க்கு மேல் கொடுத்து) வாங்கப்படுகிறது. தன்னிறைவு அடைவது மந்திரிமார்கள் மட்டுமே.


நிக்கோல்தாம்சன்
அக் 20, 2025 17:02

ஒரு பேனாவினை 14 கோடி ரூபாயில் நட்டுவைப்பார் நமது மன்னர் ,அந்த பேனா நீரினை கடலுக்கு போகாமல் தடுத்து வைக்கும் என்ற நம்பிக்கை தான் தனது பிராவிட கழகத்தின் தும்பிக்கை என்றும் கருத்து கூறுவார்


Venugopal S
அக் 20, 2025 17:44

சமதரையில் பெரிய, பெரிய அணைகள் கட்டும் வல்லுநர்கள் நமது சங்கிகள்!


சங்கி
அக் 20, 2025 18:25

விழுப்புரம் தடுப்பணை மாதிரி. அறிவுக்கும் அறிவாலயத்துக்கும் அதன் அடிவருடிகளுக்கும் சம்பந்தமே இல்லைங்கறது பதிவிலேயே தெரியுது


திகழ்ஓவியன்
அக் 20, 2025 19:01

நீங்கள் தண்ணீர் இல்லாமல் தண்ணீர் பஞ்சம் வரணும் இல்லை வெள்ளம் வந்து மக்கள் அவதி படணும் என்கிற உயரிய சிந்தனை கொண்டவர்கள் , கடவுள் ஸ்டாலின் பக்கம்


புதிய வீடியோ