உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேற்கு மாவட்டங்களில் கொட்டியது கனமழை!

மேற்கு மாவட்டங்களில் கொட்டியது கனமழை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்தில் அதிகபட்ச மழையாக சேலம் மாவட்டம் மேட்டூரில் 144 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.சென்னையில் எழும்பூர் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. மழைப்பொழிவு விபரம் மில்லிமீட்டரில்,

ஈரோடு மாவட்டம்

மொடக்குறிச்சி: 71 கவுந்தப்பாடி: 46.4 கோபிசெட்டிபாளையம்: 17.2பெருந்துறை: 17

நாமக்கல் மாவட்டம்

மோகனூர்: 67 குமாரபாளையம்: 26பரமத்தி வேலூர் : 24 திருச்செங்கோடு : 19நாமக்கல் : 11.5

சேலம் மாவட்டம்

மேட்டூர்: 144.6 ஆத்தூர்: 60 ஓமலூர் : 52 ஏற்காடு 49 சேலம் 22.5டேனிஷ் பேட்டை: 21எடப்பாடி 10.2

திருப்பூர் மாவட்டம்

உடுமலை 118திருமூர்த்தி அணை 105கலெக்டர் அலுவலகம் 92திருப்பூர் வடக்கு 72அமராவதி அணை : 54 மூலனூர் 42 ஊத்துக்குளி : 42குண்டடம்: 33 காங்கேயம் : 22வட்டமலை கரை ஓடை : 20.4 மடத்துக்குளம் : 20பல்லடம்: 16 அவிநாசி: 15தாராபுரம்: 11

கோவை மாவட்டம்

சின்னக்கல்லார் 68 வால்பாறை 67 வாரப்பட்டி 60 ஆழியாறு 59.6 சின்கோனா 44 தொண்டாமுத்தூர் 33 சூலூர் 28.2 ஆனைமலை 24 மதுக்கரை 21 கிணத்துக்கடவு 17

சேலம் மாவட்டம்

மேட்டூர் 144உடுமலை 118 திருமூர்த்தி அணை 105ஆண்டிப்பட்டி 100.6திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் 92கெலவரப்பள்ளி அணை 90 மணியாச்சி 74தல்லாகுளம் 73.6திருப்பூர் வடக்கு தாலுகா ஆபிஸ் 72மொடக்குறிச்சி 71சின்னக்கல்லார் 68மோகனூர் 67சோழவந்தான் 60ஆத்தூர் சேலம் 60

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் 35.2 சத்திரப்பட்டி 32.4 நிலக்கோட்டை 27.2 திண்டுக்கல் 12

கிருஷ்ணகிரி மாவட்டம்

கெலவரப் பள்ளி அணை 90 ஓசூர் 37.5 சின்னாறு அணை 30

மதுரை மாவட்டம்

தல்லாகுளம் 73.6 சோழவந்தான் 60 மதுரை வடக்கு 54.6 உசிலம்பட்டி 45

நீலகிரி மாவட்டம்

கீழ்கோத்தகிரி 32 நடுவட்டம் 27 கிளென்மார்கன் 24 அப்பர் கூடலூர் 20

தேனி மாவட்டம்

ஆண்டிப்பட்டி 100.6 வைகை அணை 58.4 போடிநாயக்கனூர் 54 பெரியகுளம் 50.4 மஞ்சளாறு 48 அரண்மனை புதூர் 35.6 வீரபாண்டி 28.2 சோத்துப்பாறை 26.2

தூத்துக்குடி

மணியாச்சி 74 கடம்பூர் 41 கயத்தார் 37

வெள்ள அபாய எச்சரிக்கை

அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மொத்த உயரம் 90 அடியில் தற்போது 85 அடிக்கு தண்ணீர் உள்ளது. வினாடிக்கு 3855 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை எந்த நேரத்திலும் நிரம்பி வழியும் என்பதால் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SRIDHAAR.R
அக் 21, 2024 10:45

அதிலும் எடப்பாடி ஏழாவது இடம்தான்


P. VENKATESH RAJA
அக் 21, 2024 08:40

மேற்கு மாவட்டங்கள் சேலத்தில் அதிக மழை கொட்டி தீர்த்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை