உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 மாவட்டங்களில் இன்று கனமழை கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்

10 மாவட்டங்களில் இன்று கனமழை கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில், 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, கோவை, நீலகிரி மாவட்டங்களில், அதிகனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில், நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்ததாக, சென்னை மேடவாக்கம் சந்திப்பு, தாம்பரத்தில் தலா 7; நீலகிரி மாவட்டம் பந்தலுார் தாலுகா அலுவலகத்தில், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேலும், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மணிக்கு 40 கி.மீ., வேகத்தில், பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 10ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரியில், ஒருசில இடங்களில், இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த இரண்டு மாவட்டங்களுக்கும், 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. https://x.com/dinamalarweb/status/1952527817536946224திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8ம் தேதி வரை, மேற்கு மாவட்டங்களில் கனமழை தொடரலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை