உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  6 மாவட்டங்களில் நாளை கன மழை

 6 மாவட்டங்களில் நாளை கன மழை

சென்னை: திருநெல்வேலி, துாத்துக்குடி உட்பட, ஆறு மாவட்டங்களில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ ள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: பூமத்திய ரேகைக்கு அருகில் இந்திய பெருங்கடல், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது மேற்கு, வடமேற்கு திசையில் இலங்கை நோக்கி நகர்ந்து, இன்று வலுவிழக்கக்கூடும். இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அங்கு ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று உருவாகக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒருசில இடங்களில், மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில், நாளை இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ