| ADDED : மே 04, 2025 01:54 PM
சென்னை: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் (மே 05), நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, நீலகிரி, அரியலுார், பெரம்பலுார், கரூர், திருச்சி, கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (மே 04) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=smafeist&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் (மே 05), நாளை மறுநாளும் (மே 06) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று 4ம் தேதி துவங்கி வரும் 28ம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.