வாசகர்கள் கருத்துகள் ( 1 )
MARI KUMAR
டிச 03, 2024 19:49
கனமழை கொட்டி தீர்த்தால்தான் நாடு செழிக்கும்,
சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று (டிச.,03) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலுார், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் டிசம்பர் 9ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கனமழை கொட்டி தீர்த்தால்தான் நாடு செழிக்கும்,