உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மே 17ல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

மே 17ல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களில் மே 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது'' என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் கிழக்கு அரபிக் கடலின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தமிழகத்தில் இன்று (மே 15) முதல் வரும் மே 18ம் தேதி வரை பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (மே 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களில் மே 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 18ம் தேதி தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பெரிய ராசு
மே 15, 2025 16:48

கடும் வெயில் தென்மேற்கு பருவமழை துவங்க இன்னும் குறைந்தது ஒரு மாதம் ஆகும் , மக்களை ஏமாற்ற வேண்டாம் ....தெந்தமிழகத்தின் நிலைமையை சொன்னேன்


Nada Rajan
மே 15, 2025 16:34

மழை பெய்து நாடு செழிக்கட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை