வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எனது ஊர் மதுரையில் நல்ல மழை பெய்தது
மேலும் செய்திகள்
8 மாவட்டங்களில் இன்று கனமழை
19-May-2025
சென்னை: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் மற்றும் வடக்கு கேரள பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கனமழை எச்சரிக்கை!
* கோவை,* ஈரோடு,* திருப்பூர், * தேனி, * திண்டுக்கல், * கிருஷ்ணகிரி, * தருமபுரி, * சேலம், * நாமக்கல், * திருப்பத்தூர், * வேலூர், * சிவகங்கை, * ராணிப்பேட்டை, * மதுரை, * ராமநாதபுரம், * விருதுநகர், * தென்காசி ஆகிய 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனது ஊர் மதுரையில் நல்ல மழை பெய்தது
19-May-2025