உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று மட்டும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு சத்தீஸ்கர் பகுதிகளில் கரையை கடக்கிறது. இதனால், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=769itwdn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று (செப்.,15)

திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை (செப்.,16)

ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்

செப்.,17

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

செப்.,18

நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Yasararafath
செப் 15, 2025 18:06

நல்லது


sundarsvpr
செப் 15, 2025 14:48

தற்போது வடகிழக்கு மழை பருவகாலம். மழை எச்சரிக்கை தேவை இல்லை. எச்சரிக்கை பொய்க்கலாம் அரசு கவனித்து கொள்ளும். மழை பெய்தபிறகு மழை நீர் வீணாகாமால் நீர் தேக்கி வைத்த விபரம் தெரிவிப்பதில் ஏன் செய்தியில் கூறுவதில்லை இதுதான் மக்கள் கேள்வி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை