மேலும் செய்திகள்
19 மாவட்டங்களில் நாளை கனமழை
27-Sep-2024
சென்னை:வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று, 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்ட அறிக்கை: வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக் கடல், குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, கடந்த சில நாட்களாக நிலவியது. தற்போது, இது நகர்ந்துள்ளதால், மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது அடுத்த சில நாட்களுக்கு தொடரும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 18 மாவட்டங்களில், ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, வேலுார், திருவண்ணாமலை, திருப்பத்துாரில், நாளை கனமழை பெய்யும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
27-Sep-2024