சென்னை: மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில், 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலுார், சிவகங்கை மாவட்டங்களில், அதிகபட்சமாக, 13 செ.மீ., வரை மழை பதிவாகி உள்ளது. வங்கக்கடலில் ஆந்திர கரைக்கு அப்பால் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி சில நாட்களுக்கு முன் உருவானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hfpp653b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களை ஒட்டிய, மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 12 வரை, இதே நிலை தொடரும். இன்று கனமழை
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை. நாளை கன மழை
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், விருதுநகர், துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம், மில்லி மீட்டரில்: சிறுவாணி அடிவாரம்- 43,கோவை தெற்கு தாலுகா ஆபிஸ்- 39,சின்கோனா- 27,சின்னக்கல்லார்- 26,சூலூர்- 24.2,பில்லூர் அணை- 22,கிணத்துக்கடவு- 20,வேளாண் பல்கலை.,- 20,குருந்தன் கோடு- 34,தங்கச்சிமடம்- 37.2,மண்டபம்- 23.2,பார்வுட்- 65,கெத்தை- 42,கிண்ணக்கொரை -39,தேவாலா- 37,கூடலூர் பஜார் -34,பந்தலூர்- 34,அப்பர் கூடலூர்- 32,குந்தா பாலம்-30,கீழ்க்கோத்தகிரி-26,கோடநாடு-25,குன்னூர்-21,நல்லதங்காள் ஓடை-40,குண்டடம்-32,ஆசனூர்-32.4,நாயக்கன்பாளையம்- 80,ராம பட்டினம்- 73.6,நெகமம்- 56.8,துடியலூர்- 37.6,தோலம்பாளையம்- 36,எலவந்தி- 97.6,கொளத்தூர் பாளையம்- 58.8,சங்கரண்டாம்பாளையம்- 54,மடத்து பாளையம்- 36.4.