உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை; விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை; விமான சேவைகள் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு கனமழை பெய்தது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது.சென்னை எழும்பூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது. கோடம்பாக்கம், வடபழநி, விருகம்பாக்கம், மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, நெற்குன்றம், போரூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை வரும் மற்றும் இங்கிருந்து உட்பட பல்வேறு நாடுகளுக்குப் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. மோசமான வானிலை காரணமாக 317 பயணிகளுடன் தோகாவில் இருந்து வந்த விமானம் பெங்களூரு திருப்பிவிடப்பட்டது. துபாய், லண்டன், சார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்து பறந்துவிட்டு தரையிறங்கின. தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு சென்னை உட்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழைப்பதிவு

சென்னை சைதாப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் தலா 120 மி.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 90 மி.மீ., மழை பெய்துள்ளது. செங்குன்றம், திருவள்ளூரில் தலா 30 மி.மீ., ஆர்.கே.பேட்டை, பூவிருந்தவல்லியில் தலா 20 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Tamilan
செப் 16, 2025 16:07

பழனிச்சாமி போடரோடுக்கு இயற்க்கை கொடுத்த அடி . இனியும் திருந்தவில்லை . திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்


Rajah
செப் 16, 2025 13:00

தமிழர் ஒருவர் தண்ணீரில் எரியும் அடுப்பை கண்டுபிடித்திருக்கின்றார். அவருக்கு வாழ்த்துக்கள். இது திராவிட மொடல் ஆட்சியின் சிறப்பு, பெரியார் மண்ணின் பெருமை என்றெல்லாம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வரப்போகின்றது.


Nada raja
செப் 16, 2025 11:31

சென்னை ஒருமழைக்கு தாங்காது.. டிசம்பர் மாதம் இன்னும் வரவில்லையே அப்பொழுது என்ன நிலை வரப்போகுதோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை