உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 18 மாவட்டங்களில் நாளை(நவ.25) கனமழை

18 மாவட்டங்களில் நாளை(நவ.25) கனமழை

சென்னை: ‘தமிழகத்தில், 18 மாவட்டங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், சேலம் மாவட்டம் ஆத்துார் பகுதியில், அதிகபட்சமாக, 9 செ.மீ., மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிகுப்பம்; சென்னை மாவட்டம் ஈஞ்சம்பாக்கம்; செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலுார் ஆகிய இடங்களில், தலா, 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் இருந்து தமிழகம் வழியாக, ஆந்திராவின் ராயலசீமா வரை, வளி மண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை