உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை எதிரொலி; சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

கனமழை எதிரொலி; சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக, 20 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று (டிச.,12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, தலைநகர் சென்னையில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், சென்னை விமான நிலைய பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையினால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் சிறிதுநேரம் வானில் வட்டமடித்து பின் தரையிறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் விமானங்கள் தரையிறங்க சுமார் 20 நிமிடங்கள் வரையில் தாமதமாகிறது. வெளிநகரங்களுக்கு புறப்படும் 15 உள்நாட்டு விமானங்களின் சேவையும் தாமதமாகியுள்ளது. அதேபோல, மும்பைக்கு செல்ல வேண்டிய கொச்சி விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக சென்னைக்கே மீண்டும் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Bharatham
டிச 12, 2024 16:14

விளம்பரம் முக்கியம். நம்ம மக்கள் தானே ரூபாய் 2000/- தூக்கி போட்டால் வாக்கு சாவடியில் முதல் ஆளை வந்து வாக்கு செலுத்துவார்கள்.


sankaranarayanan
டிச 12, 2024 11:34

தலைநகர் சென்னையில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது என்று தெரிந்தும் முதல்வர் மிக மிக முக்கியமான வேலையாக சிலை திறக்க கேரளம் சென்றுள்ளார் இதை எப்படி என்ன சொல்வது மக்களே சென்னை நகரமும் தமிழ்நாடும் எக்கேடு கேட்டால் என்ன எனக்கு சிலை திறப்புதான் முக்கியத்துவம் என்பதுபோல இருக்கிறது இந்த செயல் அடுத்த சிலை திறப்பு எங்கே செல்வாரோ தெரியவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை