வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்ப உப்பு உற்பத்தியாளர்கள் நஷ்டஈடு கேட்பார்கள். எங்கே போவது? மீண்டும் மத்திய அரசின் கதவை தட்டவேண்டியதுதான். மோடிஜிக்கு கடிதம் எழுதணும், யார் அங்கே, எடு ஒரு பேப்பர் அண்ட் பென்சில், கடிதம் எழுத...
நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில், கன மழை காரணமாக, உப்பு உற்பத்தியும் கடும் பாதிப்பை கண்டுள்ளது.தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், தற்போது டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில், கன மழையின் காரணமாக, உப்பு உற்பத்தி ஸ்தம்பித்துள்ளது. உப்பளத்தில் பணியாற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.அதாவது, 9,000 ஏக்கரில் அமைந்துள்ள உப்பளங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இங்கு ஆண்டுக்கு சுமார் 6.5 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. மழை நின்று, மீண்டும் வெயில் வந்தால் தான் உப்பள தொழிலாளர்களுக்கு வேலை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இப்ப உப்பு உற்பத்தியாளர்கள் நஷ்டஈடு கேட்பார்கள். எங்கே போவது? மீண்டும் மத்திய அரசின் கதவை தட்டவேண்டியதுதான். மோடிஜிக்கு கடிதம் எழுதணும், யார் அங்கே, எடு ஒரு பேப்பர் அண்ட் பென்சில், கடிதம் எழுத...