உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பிற்பகலுக்கு பிறகு பெய்யும் மழையினால், வெப்பம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சென்னை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்புவில் இருந்து 149 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. மேலும், 20 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. இதனால், விமானப் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anantharaman Srinivasan
அக் 05, 2025 23:25

வாசகர்களே..பல்லாவரம் விமானநிலையம் ஏரியாவில் நல்ல மழை பெய்தது உண்மை தான்.


K RAJENDRAN
அக் 05, 2025 21:38

it is too hot with lot of humidity...


naranam
அக் 05, 2025 20:04

மழை பெய்ததோ இல்லையோ, ஏதோ மழை பற்றி இப்படி ஒரு செய்தியை சும்மா அடித்து விட்டாலாவது அரசு இயந்திரம் விழித்துக் கொள்ளாதா என்ற ஆதங்கம் தான்..


V K
அக் 05, 2025 19:27

இது எப்போ நடந்தது.நானும் சென்னையில் தான் இருக்கேன்.பத்து நிமிஷம் மழை பெய்தது பத்து நிமிடம் மழைக்கே சென்னை தாங்கவில்லையா


Naga Subramanian
அக் 05, 2025 17:50

வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் துளியளவும் மழையில்லை .


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
அக் 05, 2025 18:41

அடையார் மற்றும் பெசன்ட் நகரில் ஒரு துளி மழை பெய்யவில்லை.


புதிய வீடியோ