உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழை எதிரொலி: 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

கனமழை எதிரொலி: 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் அதிகனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலமைச்செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.இந்த ஆய்வுக்கு பிறகு, இந்திய வானிலை மையத்தினால் சிவப்பு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பின்வரும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள் உனடியாக மாவட்டங்களுக்கு சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.

நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம்:

* திருவள்ளூர் - எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன்* காஞ்சிபுரம் - தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி* செங்கல்பட்டு- தமிழக திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் கிரந்தி குமார்* விழுப்புரம் - தொழிலாளர் நலன் துறை இயக்குநர் ராமன்* கடலூர் - சுரங்கம் மற்றும் கனிமவள இயக்குநர் மோகன்* மயிலாடுதுறை- கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு* திருவாரூர் - ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த்* நாகப்பட்டினம் - தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை* தஞ்சாவூர் - தமிழக மருத்துவ சேவைகள் கழகத்தின் கிருஷ்ணனுன்னி* கள்ளக்குறிச்சி- மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் வெங்கட பிரியா* அரியலூர்- இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனர் விஜயலட்சுமி* பெரம்பலூர்- மாற்றுத்திறனாளிகள் நலன் கமிஷனர் லட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.சென்னையில் 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் உடனடியாக மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக துவங்குமாறு அறிவுறுத்தினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராமகிருஷ்ணன்
அக் 22, 2025 04:49

வெள்ள பாதிப்பு குறித்து புகார் செய்ய கொடுக்கப்படும் போன் நம்பர்களில் யாரும் எடுத்து பதில் சொன்னதா சரித்திரம் இல்லை. அது போல தான் இந்த 12 பேரும். விடியலின் டகால்டி வேலைகள்.


Field Marshal
அக் 21, 2025 17:19

டீவியில் கதை சொல்ல ஒரு கூட்டம் ..களத்தில் ஒழுங்கா வேலை செஞ்சிருந்தா இந்த கண்துடைப்பு தேவைப்பட்டிருக்காது


முக்கிய வீடியோ