உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரத்தில் பலத்த காற்று : மீன்பிடியை தவிர்த்த மீனவர்கள்

ராமேஸ்வரத்தில் பலத்த காற்று : மீன்பிடியை தவிர்த்த மீனவர்கள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ராமேஸ்வரம் கடல் பகுதியில் போதியளவு மீன்பாடு இல்லாத நிலையில் குறைந்த எண்ணிக்கையிலேயே படகுகள் மீன்பிடிக்க சென்று வருகின்றன. நேற்று ராமேஸ்வரம் கடலில் பலத்த காற்று வீசிவருகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடலில் பலத்த காற்று வீசினாலும், எவ்வித எச்சரிக்கையும் வராத நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல எவ்வித தடையும் அறிவிக்கவில்லை என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்