உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தள்ளிவிட்ட வழக்கு: ஹேமந்த்ராஜ் குற்றவாளி என அறிவிப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தள்ளிவிட்ட வழக்கு: ஹேமந்த்ராஜ் குற்றவாளி என அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பத்தூர்: ஆந்திராவை சேர்ந்த கர்ப்பிணிக்கு , பாலியல் தொல்லை கொடுத்து, ஜோலார்ப்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வழக்கில் கைதான ஹேமந்த்ராஜ் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவனுக்கான தண்டனை விவரம் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் கணவருடன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தங்கி வேலைபார்த்து வந்தார். 4 மாத கர்ப்பம் ஆக இருந்த போது கடந்த பிப்.,06ம் தேதி கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டெர்சிட்டி ரயிலில் பொதுப்பெட்டியில் பயணித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b904jyot&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரயில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டை வந்தபோது, அந்த பெண் மட்டும் பெட்டியில் இருந்துள்ளார். அப்போது அந்தப் பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்பவன், கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கடுமையாக தாக்கி ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டான். அதில் படுகாயம் அடைந்த அந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.சம்பவம் தொடர்பாக 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பிவு செய்த போலீசார் ஹேமந்த் ராஜை கைது செய்து சியைில் அடைத்தனர். இவன் மீதான வழக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.விசாரணை முடிந்த நிலையில், ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. அவனுக்கான தண்டனை விவரம், வரும் திங்கட்கிழமை( ஜூலை 14) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சங்கி
ஜூலை 11, 2025 22:36

நடு ரோட்டுல வெச்சு சுட்டு தள்ளுங்க


Nandakumar Naidu.
ஜூலை 11, 2025 22:25

இவனையும் அதே போல ஓடும் இரயில் இருந்து தள்ளி விட்டு மரண தண்டனை கொடுக்க வேண்டும் நீதிமன்றம்.


D Natarajan
ஜூலை 11, 2025 21:11

தூக்கு வேண்டாம். 30 ஆண்டுகள் சிறை தண்டனை , பரோல் இல்லாமல், remission இல்லாமல். தூக்கு தண்டனை வெறும் கண்துடைப்பு


Ramesh Sargam
ஜூலை 11, 2025 19:49

குற்றவாளி என்று அறிவிப்பதற்கே இவ்வளவு மாதங்கள். என்றைக்கு வழக்கு முடிந்து என்றைக்கு அவனுக்கு தண்டனை கிடைக்குமோ. கொடுக்கப்படும் தண்டனையாவது தூக்குத்தண்டனையாக இருந்தால் சந்தோஷம்.


visu
ஜூலை 11, 2025 19:21

தேவையில்லாமல் கடும் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் காவல் நிலைய கொலைகள் உட்பட்ட குற்றங்களுக்கு என்று சட்ட சீர் திருத்தம் தேவை


அப்பாவி
ஜூலை 11, 2025 18:32

அந்த சம்பவத்தையே மறந்து போயிட்டாங்களே. இனிமே என்ன தண்டனை குடுத்து... என்னத்த சொல்ல.


Barakat Ali
ஜூலை 11, 2025 18:16

நிச்சயம் கருணை காட்டப்படும் ...........


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 11, 2025 18:06

எதை எதிர்பார்த்து திங்கட்கிழமை வரை தண்டனைக்கு வாய்தா கொடுக்கிறார்கள் என்பதுதான் புரிவதில்லை


KayD
ஜூலை 11, 2025 17:38

படத்தை பார்த்தாலே மன நலம் இல்லாத ஆள் போல தான் இருக்கான். இன பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டால் போதும் .. வெளிய விட வேண்டாம் உள்ளேயே இருக்கட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை