உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபரிபீடம் முதல் 18 படிகள் வரை குழாய்களில் மூலிகை குடிநீர்

சபரிபீடம் முதல் 18 படிகள் வரை குழாய்களில் மூலிகை குடிநீர்

சபரிமலை: சபரி பீடம் முதல் 18 படிகள் வரை பக்தர்களுக்கு தாகம் தீர்க்க குழாய்களில் மூலிகை குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தேவசம்போர்டு தொடங்கியுள்ளது.சபரிமலை சன்னிதானத்துக்கு மலையேறி வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் ஆங்காங்கே மூலிகை குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக ஷெட்டுகள் அமைக்கப்பட்டு காஸ் அடுப்பில் கொதிக்க வைத்து மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது இதை ஒரே இடத்தில் மையப்படுத்தி குழாய்கள் மூலம் மூலிகை குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக சபரி பீடம் முதல் 18 படிகள் வரை குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.சரங்குத்தியில் அமைக்கப்பட்டுள்ள பாய்லர் பிளான்டில் இருந்து இக்குழாய்களில் மூலிகை குடிநீர் வருகிறது. சுக்கு, பதிமுகம், ராமிச்சம் உள்ளிட்ட மூலிகைகள் இதில் சேர்க்கப்படுகிறது. தேவசம்போர்டு ஊழியர்களுடன் தற்காலிக பணியாளர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சபரி பீடம் முதல் 18 படி வரை வழங்கும் குழாய் மூலிகை குடிநீர் மையங்கள் உட்பட 73 மையங்களில் மூலிகை குடிநீர் வழங்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !