உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த தவறிய தலைமை செயலர்கள் மீது அவமதிப்பு வழக்கு

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த தவறிய தலைமை செயலர்கள் மீது அவமதிப்பு வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த தவறிய, அரசு தலைமை செயலர்களுக்கு எதிராக, தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது, சென்னை உயர் நீதிமன்றம்.கோவை, சேலம் அரசு போக்குவரத்துக் கழகங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழக அரசு குடிநீர் வடிகால் வாரியம் போன்றவற்றில் பணிபுரிந்து இறந்தவர்களின் வாரிசுகளான நித்யா, கார்த்திகேயன், அஜித்குமார் மற்றும் அன்பரசன் ஆகியோர், தங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக்கோரி அளித்த மனுக்களை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2020ல் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 'பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கவும், அதற்கு ஏற்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்யவும், ஒரு குழு அமைக்க வேண்டும். குழுவிடம் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை பெற்று, எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, 2023 செப்., 19ல் உத்தரவிட்டிருந்தது.நீதிமன்ற உத்தரவுப்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, இந்த நான்கு பேர் தொடர்ந்த வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிடும்படி, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, இந்த வழக்குகள் நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக, தலைமை செயலர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அதை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:இந்த நீதிமன்றம், 2023 செப்., 19ல் பிறப்பித்த உத்தரவின்படி, இந்தப் பிரச்னையை சரியான கண்ணோட்டத்தில் ஆராய, ஒரு குழு அமைக்கவில்லை என்பது தெரிய வருகிறது. இதை பார்க்கும்போது, நீதிமன்ற உத்தரவை, தலைமை செயலர் பின்பற்றத் தவறி விட்டார் என்பதற்கான முகாந்திரம் உள்ளது.நீதிமன்ற உத்தரவை அவமதித்த, தலைமை செயலரின் அணுகுமுறை வேதனை அளிக்கிறது. தற்போதைய பிரச்னை, பல அதிகாரிகளின் சோம்பல் மனப்பான்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. மாநில நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் உள்ள தலைமை செயலரே, நீதிமன்ற உத்தரவுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும்போது, அவருக்கு கீழுள்ள அதிகாரிகள், அதை அமல்படுத்துவர் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்? நீதிக்காக நீதிமன்றத்தை அணுகும் சாமானியர்கள் மற்றும் ஏழை மக்கள் மீது, அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.இந்த நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்த பின்னும், நீதியின் பலனை அனுபவிக்க முடியாத நிலையில், வழக்கு தொடுத்தவர்கள் உள்ளனர் என்பது தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் தலைமை செயலருக்கு எதிராக, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்படுகிறது. இது, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல், துணிச்சலுடன் செயல்படும் அதிகாரிகளுக்கான செய்தியாக இருக்கும்.எனவே, 2023 செப்., 19 முதல் இன்றுவரை தலைமை செயலராக பணிபுரிந்த அனைத்து அதிகாரிகளின் விபரங்களையும் பெற்று, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்ட விதிகளின்கீழ் அவமதிப்பு வழக்கை, உயர் நீதிமன்ற பதிவாளர் பதிவு செய்ய வேண்டும். அடுத்த விசாரணையின்போது, அவர்கள் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ramaswamy SD
ஜூன் 10, 2025 00:12

நிலத்தை கையகப்படுத்தி நாற்பது ஆண்டுகாலமாக வீடுகட்டப்போகிறோம் என்று வெற்றிபெற அறிக்கை அடுத்து ரைடு அகலப்படுத்த போவது பொய்யான தகவல் நீதி மன்றத்தில். உண்மையில் அதை புறம்போக்காக மாற்றி தமிழகத்தையே பல இடங்களில் அரசு நிலங்களையும்,தனியாருக்கு சாந்தமான நிலத்தை புறம்போக்காக மாற்றி அதை வளைத்து ஸ்வா செய்த சாராய சாம்ராஜ் மன்னர்களுடன் கையூட்டு வாங்கிய சிம்.டி அதிகாரிகளை உயர் நீதிமன்றம், மற்றும் உச்ச நீதி மன்றம் வரை செல்ல தயாராகி வருகிறார்.குறிப்பாக நில அளவீடு செய்பவர் மற்றும ரஜினியை அதிகாரிகளை விடப்படவில்லை.எங்களுக்கு 85 வயதிற்கு மேல் ஆகிவிட்டது இரு அரசுகளும் தூங்கிக்கொண்டதா?அல்லது சாராய மன்னர் குடும்பத்திற்க்கு சலுகை காட்டியதா?முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லை.இறுதிவரை பிராட் வெற்றி பெறுவோம் .நீதி வெல்லும்,தர்மம் வெல்லும்.கடவுள் நியாயத்தின் பக்கம் இருக்கிறார்.


Selvaraj K
ஜூன் 08, 2025 22:52

கருணை என்பது இல்லாதவர்க்கு உதவுவது இருப்பவர்கே கொடுப்பது அல்ல பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு நீதி மன்றம் போரோம் ஆனால் நீதிபதிகள் தவறு செய்தவன் தப்பிக்க சட்டத்தில் ஓட்டை போட்டு கொடுப்பார்கள் . வேளை இல்லாதவர்கள் இருக்கும் போது வாரிசு கருணை என்பது கடைந்து எடுத்த சுயநலம்


A P
ஜூன் 08, 2025 13:39

The Copilot of Google points out some instances of non-obeying court orders by HR& CE . " There have been instances where the Tamil Nadu Hindu Religious and Chari Endowments HR&CE Department did not fully ute orders issued by the Madras High Court. For example: Temple Renovation Delay: The Madras High Court warned the HR&CE Commissioner about possible removal from office if the department failed to renovate the Vijaya Varadaraja Perumal Temple as per a 2020 court order. Temple Land Sale Concerns: The court sought a detailed report on the alleged sale of 2,000 acres of temple land to private parties, questioning whether the HR&CE Department had properly followed legal procedures. Executive Officer Appointments: The court dismissed a challenge against the HR&CE Department's appointment of utive officers to administer temple properties, but concerns were raised about whether the department had acted transparently." இதுவல்லாமல், திரு ரங்கராஜன் நரசிம்மன், HR&CEயின் பல தில்லு முல்லுகளை, கோர்ட்டில் எடுத்துச் சொல்லி, கேஸ் போட்டிருக்கிறார். கிட்டத்தட்ட கோர்ட்டின் 50க்கும் மேற்பட்ட ஆர்டர்களை துறை உதாஸீனபடுத்துகிறதாக சொல்லி இருக்கிறார். இதற்கெல்லாம், துறை அதிகாரிகளுக்கு நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்புமா என்று தெரியவில்லை.


Sabesan Umapathy
ஜூன் 08, 2025 10:02

Let it be lesson for all. Justice to be implemented to all by the court is highly appreciated


Kalyanaraman
ஜூன் 08, 2025 08:53

முதுகெலும்பற்ற ஆண்மையற்ற நமது சட்டங்களாலும் நீதிமன்றங்களாலும் அரசு அதிகாரிகளை கடும் கண்டனத்தை மட்டுமே தெரிவிக்க முடியும் வேறு ஒன்றும் செய்ய முடியாது. சாமானியனின் வரி பணத்தில் இயங்கும் நீதிமன்றங்கள் சாமானியனுக்கு கிடையாது அதிகாரம், பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே. வாய் கிழிய பேசும் நீதிமன்றங்கள் எத்தனை வழக்குகளை விரைவாக முடித்து இருக்கிறது?? இதில் இரண்டு மாதங்கள் கோடை விடுமுறை வேறு


M S RAGHUNATHAN
ஜூன் 08, 2025 08:45

குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு " Time limit" fix செய்யும் நீதி அரசர்கள் ஏன் தீர்ப்புகளை அரசுத் துறைகள் நிறைவேற்ற "time limit" fix செய்வதில்லை. The observations of HC are lacking creditiblity.


M S RAGHUNATHAN
ஜூன் 08, 2025 08:42

நீதிபதிகள் தீர்ப்புகளை கொடுக்கும்போதே சம்பந்தப்பட்ட துறை இத்தனை காலத்திற்குள் தீர்ப்பு நிறைவேற்றப் படவேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட வேண்டும். தவறும் பட்சத்தில் உத்தரவை நிறைவேற்ற தவறிய அதிகாரிக்கு exemplary penalty விதிக்கப்படும் என்று சொல்ல வேண்டும். மேல் முறையீடு செய்வதற்கும்.ஒரு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அந்தக் கால கேடு மீறப்பட்டால் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்ய வேண்டும்.


Kasimani Baskaran
ஜூன் 08, 2025 07:46

ஒய்வு பெற்ற பலருக்கு தமிழகத்தில் பென்ஷன் கூட ஒழுங்காக கொடுக்கப்படுவது கிடையாது. நீதிமன்றம் சென்று தீர்ப்பு வாங்கி அதை அமல்படுத்தாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்போட்டு அதிலும் தீர்ப்பு வாங்கினாலும் கூட அரசு அசைவதில்லை. ஜவ்வாக இழுக்கும் நீதிமன்றமே தீர்ப்பு கொடுத்ததும் கூட அடிப்படை விஷயங்களில் கூட கவனம் செலுத்தாத திராவிட மாடல் என்பது அவ்வளவு கொடியது என்பது பலருக்கு புரிந்திருக்கும். பணத்துக்கு உரிமையை விற்கும் பன்றிகள் இருக்கும் வரை இதற்க்கெல்லாம் தீர்வே கிடையாது.


GMM
ஜூன் 08, 2025 07:36

குழு அமைக்க, ஆளும் கட்சி அமைச்சர் பரிந்துரை தேவை. குழு தேர்வு, நிதி ஒதுக்கீடு, இட வசதி.. கூட்டு நிர்வாகம். 2023 செப்., 19 முதல் பணிபுரிந்த அமைச்சர்களை விசாரிக்க வேண்டும். ? கருணை அடிப்படையில் வேலை கட்டாயம் இல்லை? ஒரு டாக்டர் இறந்தால் , மகன் என்ஜினீயர் என்றால் வேலை கொடுக்க முடியாது. பணியில் உள்ள அதிகாரிகளை நீதிபதி நேரடியாக விசாரிப்பது , நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவது நிர்வாக நடைமுறையில் கடினமானது. உயர் அதிகாரிகள் மீது நீதிபதி நடவடிக்கை எடுக்க கவர்னர் முன் அனுமதி பெற வேண்டும்.


M S RAGHUNATHAN
ஜூன் 08, 2025 10:15

தவறான புரிதல். ஒரு ஊழியர் இறந்தால் அந்த இடத்தில் தான் வாரிசை கருணை அடிப்படையில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பது இல்லை. வாரிசின்.கல்வித் தகுதி அடிப்படையின் கீழ் நியமனம் செய்யப் படவேண்டும். இத்தனை கால தாமதம்.செய்தால் அது அரசின் கருணை அடிப்படையின் கீழ் வேலை என்ற கொள்கை அடிபட்டு போகிறது.


Mecca Shivan
ஜூன் 08, 2025 07:10

தலைமைச்செயலர் என்பவர் ஒரு மாநிலத்தையே ஆளும் அதிகாரம் உள்ளவர் என்பதை மறந்துவிடக்கூடாது ..அவர்களை எதுவும் செய்ய முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை