உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது.சில தினங்களுக்கு முன், வி.சி., தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கூறப்பட்ட தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை பதிவு செய்தார்.அதில், கூறியிருந்ததாவது: துணை முதல்வர் உதயநிதி, மூன்று பிராண சன்னியாசிகளான ஜீயர்களை தன் வீட்டிற்கு அழைத்து, கால்களை கழுவி பாத பூஜை செய்துள்ளார். அந்த தீர்த்தத்தை பருகி ஆசி பெற்று, அவர்களுக்கு உணவிட்டு வெகுமதி அளித்து வழி அனுப்பி இருக்கிறார். பிராமணர்களை இழிவுபடுத்தியதற்காகவும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவும் இதைச் செய்துள்ளார். நீங்கள் என்னடான்னா, இரண்டு சீட்டுக்கு பிளாஸ்டிக் சேர்ல உட்கார்ந்து, கைகட்டி, வாய் பொத்தி இருந்துட்டு, அரசியலுக்காக சனாதனத்தை இழுப்பது கேவலமாக இல்லையா.உங்கள் கட்சி அழுத்தத்திற்கு ஆளாகி விட்டு, சனாதனத்தை குடைய பார்த்தால், பிறகு உதயநிதிக்கு கோபம் வந்து, அடுத்த தேர்தலில், ஒரு சீட் தான் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்; யோசித்து எழுத வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.ரங்கராஜன் நரசிம்மன் பதிவுக்கு, ஜீயர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மனை டிச.,15ல் கைது செய்தனர்.இதனை எதிர்த்து, அவரது மகன் முகுந்தன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் ' சட்ட விதிகளை பின்பற்றாமல் தனது தந்தை கைது செய்யப்பட்டா்' எனக் கூறியிருந்தார்.ஆனால் போலீசார் சா்பில் ஆஜரான வழக்கறிஞர், ' விதிகளை பின்பற்றித் தான் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது' எனக்கூறியிருந்தனர்.இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், அரசியல் தலைவர்கள், மடாதிபதிகள் பற்றிபேசக்கூடாது என்ற நிபந்னையின் பேரில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Parasumanna Sokkaiyer Kannan
டிச 26, 2024 18:36

The judiciary should think first whether they have have acted on their own or they dictacted by others because the conditions of bail is rediculus.


Jebamani Mohanraj
டிச 25, 2024 21:42

பிரிவினை பேசலாம், நக்கல் அடிக்கலாம்,


ஆரூர் ரங்
டிச 25, 2024 13:56

உதவாநிதியை விமர்சிப்பதால் அவர் திருந்தப் போவதில்லை. அரசியல் ஆதரவும் பின்புலமும் இல்லாதவர்கள் அநாவசிய சமூக ஊடக பதிவுகளை தவிர்க்க வேண்டும். மாரிதாஸ், கிஷோர், கார்த்திக் பட்டபாடு உமக்குத் தெரியும். ஆனாலென்ன? நீங்கள் யாரையாவது குறை கூறாமல் இருந்ததுண்டா?தராதரமில்லாமல் துறவிகள் என்றும் பாராமல் எல்லோரையும் தூஷிக்கும் உமக்கு இது தேவைதான்.


RAAJ
டிச 25, 2024 12:18

இனிமேலாவது வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள். நக்கல் நையாண்டி செய்து பேசியதால்தான் உங்களுக்கு தண்டனை நீங்கள் செய்த கர்மா ஒரு வாரம் சிறையில் இருக்க வேண்டி வந்தது. இப் போதும் யாமினி இருக்கிறீர்கள் எனவே எந்த அரசியல்வாதியை பற்றியும் குறிப்பாக ஆளுங்கட்சியை பற்றி வாய் திறக்கவே திறக்காதீர்கள். உங்களுக்கு அஷ்டம சனி பிடித்துள்ளது எனவே மௌனமாக இருங்கள்.


Tetra
டிச 25, 2024 12:07

உளராதீர்கள். அரசியல் பித்தலாட்டத்தையே சுட்டிக்காட்டியுள்ளார். அவர் துஷ்யந்த்தை போல் கார்பரேட் வைதிகர் அல்ல


Tetra
டிச 25, 2024 11:53

வெறுப்பை காண்பிக்கும் நண்பரே. இவர் அவருடைய சமயத்தில் இருக்கும் முரண்பாடுகளையே சுட்டிக்காட்டுகிறார். அதுவும் வைணவ சன்யாசிகளேயே. உங்கள் யாருக்காவது பாதிரியாரையோ. முல்லாவையோ உங்கள் மதத்தில் விமர்சிக்க முடியுமா? அவர் ந்யாயத்துக்கு போராடுகிறார். அதெல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. 200₹ உபிஸ்ஸுக்கு மற்றவரை மட்டப்படுத்தி ஆனந்தப் படுவதே வேலை


Venkatesan Ramasamay
டிச 25, 2024 09:50

ஓம் சுக்லாம்ப்ரதாம் ... ஸ்வாகே ...


sankar
டிச 25, 2024 08:28

சிரிப்பாய் சிரித்த மாடல்


Gajageswari
டிச 25, 2024 07:02

வெட்கப்பட்டு தலை குறிக்கிறது


N Annamalai
டிச 25, 2024 05:59

தவறான செயல் .காவல்துறை உடன்பட்டு இருக்க கூடாது .ஒரு ஆக்கிரமிப்பு போல் உள்ளது .அனைவரும் வெகுண்டு எழுந்தால் கஷ்டம் .இந்த வேகத்தை வேறு இடங்களில் காட்டலாம் .தமிழகம் சாலை விபத்துகளில் முதல் இடம் .குடித்து விட்டு வண்டி ஓட்டுவது ஒரு சாதாரண விஷயம் .ஹெல்மெட் போடுவது தேவை இல்லை .என தினப்படி சரிசெய்ய வேண்டிய விசயங்கள் அதிகம் உண்டு .


முக்கிய வீடியோ