உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருதமலையில் 184 அடி முருகன் சிலை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி

மருதமலையில் 184 அடி முருகன் சிலை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை மாவட்டம், மருதமலையில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடம், அடிப்படை வசதிகள் போன்ற முழு விபரங்களுடன், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான பகுதி. நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன. இந்த பகுதியில், 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து, சென்னை கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம், 184 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கு, கடந்த மாதம் 9ல் தடையில்லா சான்று பெற விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதியில் சிலை அமைவதால், யானை வழித்தடங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது' என கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் கூறியதாவது: சிலை அமைவதற்கு, இந்த நீதிமன்றம் தடையாக இருக்காது. அதேநேரம், வனப்பகுதியில் இவ்வளவு உயரத்தில் சிலை அமைக்கப்படும்போது, அதை பார்வையிட எவ்வளவு பேர் வருவர்; குறைந்தபட்சம் 1,000 கார்களாவது வரும்; அவற்றை எங்கு நிறுத்துவீர்கள்? அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் செய்ய, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது; அவர்கள் விட்டு செல்லும் குப்பை எவ்வாறு அகற்றப்படும்? இவர்கள் விட்டு செல்லும் திடக்கழிவுகளால், நாளடைவில் வனமே மறைந்து விடாதா? இந்த திட்டத்தால், வனப்பகுதிக்கு, எவ்வித தொந்தரவும் ஏற்படக் கூடாது. இங்கு 184 அடி உயர சிலை அமைத்தால், அதை சுற்றிய பகுதிகள் நகரமயமாகாதா; பல்வேறு காரணங்களால் வனப்பகுதிகள் சுருங்கி வருகின்றன. இதன் காரணமாக, மனித- - விலங்குகள் மோதல் நிகழ்வுகளும் நடக்கின்றன. போதிய வசதிகள் செய்யப்படவில்லை எனில், நெரிசல் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ''நீதிமன்றம் கோரிய விபரங்களுடன் விரிவான அறிக்கையை, அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்கிறோம்,'' என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், 'கூட்ட நெரிசல் மேலாண்மை நிர்வகிக்கும் முறை, சிலை அமைய உள்ள சரியான இடம், பார்க்கிங் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்த முழு விபரங்களுடன், அறநிலையத் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின், சம்பந்தப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பாக, அத்துறை நிபுணர்கள் ஆய்வு செய்வது குறித்து, இந்த நீதிமன்றம் முடிவு செய்யும்' என உத்தரவிட்டு, விசாரணையை டிச., 5க்கு தள்ளிவைத்தனர். அதுவரை, பணிகளை துவக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

c.mohanraj raj
நவ 08, 2025 21:12

அவ்வளவு உயரம் பெரியார் சிலையோ அல்லது சிலுவையோ வைக்கிறோம் என்றால் சரி என்று சொல்லி இருப்பார்கள்


Muralidharan S
நவ 08, 2025 13:57

கோவில்கள் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது.... வார விடுமுறையை முன்னிட்டு என்று ஒரு கூட்டமே சும்மா ஜாலிக்கு கிளம்பிவிடுகிறது.. கூட்டம் நிரம்பி வழியும் எந்த கோவில்களிலும் அமைதியும் இல்லை.. பக்தியும் இல்லை.. மணிக்கணக்கில் கியூ வில் சண்டை சச்சரவுகள் அடிதடிகள், தள்ளுமுள்ளுக்கள் தான் நடக்கிறது..இதில் தின்பண்டங்களை தின்றுகொண்டே வரிசையில் செல்லும் லக்ஷணம் வேறு.. இத்தனை அவலங்களையும் தாண்டி கடவுள் முன்னே சென்றால் 10 வினாடிகள் கூட நின்று தரிசிக்க முடியாது.. ஊழியர்களுக்கு , ப்ரோக்கர்களுக்கு, ஏஜெண்டுகளுக்கு பணம் / லஞ்சம் கொடுப்பவர்கள் மட்டுமே நின்று தரிசனம் செய்யமுடியும்.. இப்படி சிறப்புமிக்க எல்லா கோவில்களையும் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி வைத்து இருக்கிறார்கள்.. பக்தி என்பது அமைதியுலும், ஆத்தாவினாலும் மட்டுமே உணரமுடியும் தவிர.. இப்படிப்பட்ட வியாபார கூட்டநெரிசல்களில் உணர முடியாது.. ஒரு விளக்கு கூட ஏற்றி பூஜை செய்வதற்ற்கு கூட வழியில்லாத எத்தனையோ பண்டைய காலத்து மன்னர்கள் கட்டிய கோவில்கள் சிறிது சிறிதாக அழித்துக்கொண்டு இருக்கின்றன.. அதை பராமரித்தாலே போதும்.. நிஜமான பக்திக்காக, எதையும் எதிர்பார்க்காமல், ஆத்மாவிற்காக, பிறப்பை அறுக்க வேண்டி , முக்தி பெற வேண்டி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் , யாருமே செல்லாமல் பாழடைந்து கொண்டு இருக்கும் அத்தகைய பழமையான ஆள் அரவமற்ற ஒரு பூஜை கூட நடக்க வழியில்லாமல் இருக்கும் கோவில்களுக்கு சென்று உங்களால் முடிந்த கடவுள் / கோவில் கைங்கரியங்களை புரிந்து அந்த கோவில்களை எல்லாம் முதலில் அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்.... நிச்சயம் நல்லது நடக்கும்.. அதை எல்லாம் விட்டுவிட்டு இப்படி 184 அடிகள் 300 அடிகள் சிலைவைத்து கடவுளை வியாபார பொருளாக கண்காட்சி பொருளாக மாற்றுவதால் சுற்றுசூழலுக்கு மட்டும் அல்ல மக்களுக்கும் கூட்ட நெரிசல்களால் அழிவுதான் ஏற்படும்..


RAMESH KUMAR R V
நவ 08, 2025 13:28

தயவு செய்து கோவில்களை விளம்பர பொருள் ஆக்காதீர்கள்.


ram
நவ 08, 2025 10:59

வழக்கு போட்ட நபர் ஹிந்து மதத்தை சேர்ந்தவரா என்று முதலில் விசாரிக்க வேண்டும் இப்போது மதம் மாறியவர்கள் அனைவரும் அரசின் சலுகைகளுக்காக ஹிந்து பேரில் இறக்கும் வரை இருக்கிறார்கள், இதுபோல ஆட்கள் தான் ஹிந்துக்கள் விழாக்களை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார்கள்,


Natchimuthu Chithiraisamy
நவ 08, 2025 10:27

சிறந்த முருக பத்தர்கள், வெளிநாட்டிலிருந்து ஒரு நபருக்கு 1 லட்சம் பணம் மாற்றலாம் என்கிற சலுகைகள் மூலம் பல பேருக்கு வந்து அவர்கள் கமிஷன் போக 90000 ஒன்று சேர்த்து பல ஆயிரம் கோடிகளிலில் பிரமாண்டமான பல சர்ச்சு அமைவதை பார்த்து சந்தோச படுகிறோம். எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. செய்திகளும் இல்லை.


Natchimuthu Chithiraisamy
நவ 08, 2025 10:16

இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தனர்.


vbs manian
நவ 08, 2025 09:59

விளம்பரம் ஆடம்பரம் முருகனுக்கு தேவையில்லை. மருதமலை செல்லும் பக்தர்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. இவைகளை மேம்படுத்தலாம். முருகனை வைத்து காசு பார்க்கும் முயற்சி.


KOVAIKARAN
நவ 08, 2025 09:53

இல்லாத ஊருக்கு வழி தேடுகிறார். அவர் அந்த தேடுதலிலேயே காணாமல் போக வாய்ப்புள்ளது.


Barakat Ali
நவ 08, 2025 09:11

எங்களுக்கு பதில் சொல்லப் புடிக்காது ....


V RAMASWAMY
நவ 08, 2025 09:10

முதலில் ஒவ்வொரு கோயில் நுழைவிலும் வாகனங்களுக்கு வசூல் செய்யும் கட்டணக்கொள்ளையை நிறுத்தவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை