உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐகோர்ட் உத்தரவு மீறல்: ஆபீஸ் ஒர்க் செய்யும் கைதிகள்

ஐகோர்ட் உத்தரவு மீறல்: ஆபீஸ் ஒர்க் செய்யும் கைதிகள்

மதுரை: தமிழக சிறைகளில், ஐகோர்ட் உத்தரவை மீறி அலுவலக பணிகளில் தண்டனை கைதிகளை பயன்படுத்துவது தொடர்கிறது. இதனால் நிர்வாக ரீதியான முன்னெச்சரிக்கை உத்தரவுகள், ரகசியங்கள் வெளியே கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. நிர்வாக பணிகளை அமைச்சு பணியாளர்கள் கவனிக்கின்றனர். காவலர்கள், கைதிகளின் அனைத்து விபரங்கள், நிர்வாக ரீதியாக கடித போக்குவரத்து அனைத்தையும் இவர்கள் மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், கடந்த மாதம் புழல் சிறை தண்டனை கைதி கோதண்டம், 30 நாள் பரோல் கேட்டு ஐகோர்ட்டை நாடினார். 'சிறை அதிகாரிகளுக்கு உதவியாக அலுவலக பணிகளை செய்து வந்ததோடு, எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் இருப்பதால், தனக்கு பரோல் அனுமதிக்க வேண்டும்' என்றார்.அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், 'தண்டனை கைதிகளுக்கென சிறை நிர்வாகத்தால் குறிப்பிட்ட பணிகள் ஒதுக்கப்படும் போது, அரசு ஊழியர்கள் ஊதியம் வாங்கிக்கொண்டு அலுவல் பணிகளில் கைதிகளை ஈடுபடுத்துவது எப்படி நியாயமாகும்' என, கேட்டனர்.தொடர்ந்து, கைதிகளை அலுவல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என, உத்தரவிட்டனர். இதுகுறித்து புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். ஆனால், இந்த உத்தரவையும், எச்சரிக்கையையும் சிறைத்துறை கண்டுக்கொள்ளவே இல்லை.பெரும்பாலான மத்திய சிறைகளில், இன்னும் அலுவல் பணிகளிலும், அதிகாரிகளின் வீடுகளிலும் கைதிகளை பயன்படுத்துவது தொடர்கிறது.சிறை காவலர்கள் கூறியதாவது: நிர்வாக ரீதியாகவும், அதிகாரிகளின் வீடுகளிலும் கைதிகளை பயன்படுத்தும்போது அலுவல் விஷயங்கள் குறித்த ரகசியங்கள் பிற கைதிகளுக்கு தெரியவரும். உதாரணமாக சில கைதிகளை குறிப்பிட்டு, அவர்களை கண்காணிக்குமாறு ரகசிய தகவல் வரும்பட்சத்தில், அது சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு தெரிந்துவிடும். அவர்கள் சுதாரிப்பர்.சிறைக்குள் அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க அலுவல் பணிகளிலும், அதிகாரிகளின் வீடுகளிலும் கைதிகளை பயன்படுத்தக்கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவை, டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 19, 2025 10:13

இவர்கள் தங்களது அனுபவத்தை வைத்து அரசு பணிகளில் சேர வாய்ப்பும், சீனியாரிட்டியை வைத்து பதவி உயர்வும் பெற வாய்ப்புண்டா கோப்பால்?


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 19, 2025 10:05

இவங்களாவது வேலை பார்க்குறாங்களேன்னு சந்தோஷப்படுங்கய்யா. இவங்களும் ஜாக்டோ ஜீயாவோன்னு சங்கத்துல சேர்ந்துட்டா அப்புறம் இவங்க பார்க்கற வேலையும் நடக்காதுங்க


R.RAMACHANDRAN
பிப் 19, 2025 06:28

அரசு பணியில் சேர்ப்பவர்கள் அனைவரும் குடியரசு தலைவர்/மாநில ஆளுநர் போலவும் தம்மை கார்த்திக் கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அது குறித்து ஆதார பூர்வமாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்காமல் புகார்களை குற்றவாளிகளுக்கே அனுப்பி பாதுகாக்கின்ற பணியை செய்கின்றனர். நீதிமன்றம் சென்றால் அவர்களுக்காக அரசு செலவு செய்கின்றது.எனவே அவர்கள் ஆணவத்துடன் இருக்கின்றனர்.


Bye Pass
பிப் 19, 2025 06:27

வார்டன் வீடுகளில் துணி தோய்ப்பது ..பாத்திரம் கழுவுவது ..வீட்டை பெருக்கி துடைப்பது சர்வசாதாரணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை