மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
3 hour(s) ago
மதுரை:'பழனி கோவில் கிரி வீதிகளில் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மலையடிவாரத்தில் கிரி வீதிகள் உள்ளன. இங்கு ஆக்கிரமிப்புகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட உயர் நீதிமன்றத்தில் மனு செய்தேன்; அகற்ற 2018ல் உத்தரவிட்டது.அதை நிறைவேற்றாததால் அப்போதைய கலெக்டர் வினய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.அந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்தும், அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.அந்த வழக்கை நேற்று மீண்டும் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது. கோவில் இணைக் கமிஷனர், பழனி நகராட்சி கமிஷனர், பழனி தாசில்தார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கண்காணிப்புக் குழு கிரி வீதியில் ஆய்வு செய்ய வேண்டும். புதிதாக ஆக்கிரமிப்பாளர்கள் உருவாகியுள்ளனரா, வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனரா என சரிபார்க்க வேண்டும்.கண்காணிப்புக்குழு பரிந்துரைகளுடன் அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கைகளைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்., 7ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.
3 hour(s) ago