உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர்கள் மீது நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவு

கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர்கள் மீது நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவு

சென்னை:'தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக புகார் வந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாகும்போது, முதல் நான்கு நாட்களுக்கு, அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையை சரிபார்க்க, அரசு ஏற்கனவே குழுக்களை அமைத்துள்ளது' என தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதி, 'அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணத்தை, தியேட்டர்கள் வசூலிப்பது பார்வையாளர்களை ஏமாற்றும் செயல். இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்படும்போது, அரசு அமைத்துள்ள குழுக்கள் சம்பந்தப்பட்ட தியேட்டர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.நீதிபதி மேலும், 'இன்றைய காலகட்டத்தில், தியேட்டர்களில் விற்கப்படும், 'பாப்கார்ன்' கூட வீட்டிற்கே டெலிவரி செய்யும் நிலை இருப்பதையும், ஓ.டி.டி.,யில் படங்களை பார்க்கும் பார்வையாளர்கள் அதிகரித்து விட்டதால், தியேட்டர்கள் அதிக காலம் நீடிக்காது என்பதையும், தியேட்டர் உரிமையாளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ