உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு

வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல், வி.ஏ.ஓ., பணியிடங்களை நேரடியாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.வி.ஏ.ஓ., அலுவலர் சங்க மாநில தலைவர் அருள்ராஜ், சிவகங்கை மாவட்டம், சீவலத்தி வி.ஏ.ஓ.,அகமது பயஸ் தாக்கல் செய்த மனு:மாவட்ட பணியிட மாறுதலுக்கு, பல்வேறு மாவட்டங்களிலுள்ள, 218 வி.ஏ.ஓ., காலிப்பணியிடங்களுக்கு செப்., 1 முதல், 15 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருவாய்த்துறை அறிவிப்பு வெளியிட்டது.அலுவலர்களின் முதுநிலை பட்டியலை கருத்தில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த தேதியை அடிப்படையாக கொண்டு மாவட்ட மாறுதல் விண்ணப்பங்களை பரிசீலித்தது ஏற்புடையதல்ல என, இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே உயர் நீதிமன்றம் தடை விதித்தது.மேலும், 218 காலிப்பணியிடங்களையும் நேரடியாக நிரப்ப முடிவு செய்து, பட்டியலை டி.என்.பி.எஸ்.சி.,க்கு தமிழக அரசு அனுப்பியது.இதனால் இடமாறுதலுக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களின் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 218 வி.ஏ.ஓ., பணியிடங்களை மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல் நேரடியாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப இடைக்கால தடை விதிக்க வேண்டும். இடமாறுதல் கோரிய தகுதியான வி.ஏ.ஓ.,க்களின் மனுக்களை பரிசீலித்து, இடமாறுதல் வழங்கிய பின் நேரடி முறையில் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டனர்.நீதிபதி கே.குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவில், ''மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல் நேரடியாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. வருவாய்த்துறை செயலர், கமிஷனர், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. விசாரணை நவ., 14க்கு ஒத்திவைக்கப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sundar
நவ 06, 2025 14:59

வேலையில் சேரும் நாள் படி அல்ல சீனியாரிட்டி. ரேங்க் படி தான் சீனியாரிட்டி. இல்லாவிட்டால் பக்கத்து ஊரில் உள்ளவர் (ரேங்க் கீழே இருந்தாலும்) சீனியர் ஆகி விடுவார். ரூல்ஸ் அப்படி அல்ல. ரேங்க் லிஸ்ட் க்கு மதிப்பு உண்டு. .


Gajageswari
நவ 06, 2025 13:58

தாசில்தார் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் சொந்த மாவட்டத்தில் பணி நியமனம் செய்வதால் ஊழல்/தவறுகள் அதிகமாகிறது. சொந்த மாவட்டத்தில் இருந்து 4 மாவட்டங்கள் தாண்டி பணி வழங்க வேண்டும்


sundarsvpr
நவ 06, 2025 13:23

அரசு அமைச்சர்கள் அரசு ஊழியர்களே. நிர்வாக நலன் நிமித்தம் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரு அரசு ஊழியர் மாற்றப்படவேண்டும் என்பது அலுவலக நடைமுறை நூல்விதி. அப்போதுதான் அந்த பதவி இடத்தில நடந்த ஊழல் குறைபாடு போன்றவை வெளிவரும். தவறுகள் திருத்தப்பட்டு பதவி இடம் தூமையாய் இருக்கும். இந்த விதி அமைச்சர்களுக்கும் பொருந்தும்.


V RAMASWAMY
நவ 06, 2025 13:08

போகிற போக்கைப் பார்த்தால், நீதிமன்றங்களே அரசு நிர்வாகம் நடத்தினால் தேவலை போல் தெரிகிறதோ?


duruvasar
நவ 06, 2025 09:19

மீண்டும் மீண்டும் அமுதாவா? என்ன கொடுமை சரவணா


Field Marshal
நவ 06, 2025 09:03

சுப்ரிம் கோர்ட் வரை சென்று அபிஷேக் கபில் வில்சன் இவர்கள் வருமானத்துக்கு வழி பண்ணனும்


KRISHNAN R
நவ 06, 2025 08:43

நல்ல முடிவு


முக்கிய வீடியோ