உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவு; மார்க்சிஸ்ட் மறுசீராய்வு மனு ஒத்திவைப்பு   உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு  

கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவு; மார்க்சிஸ்ட் மறுசீராய்வு மனு ஒத்திவைப்பு   உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு  

மதுரை : அரசின் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதை மறு சீராய்வு செய்ய மனு தாக்கல் செய்ய அனுமதி கோரிய மார்க்சிஸ்ட் மனு மீதான விசாரணையை இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.மதுரை சித்தன்,'விளாங்குடி 20 வது வார்டு காமாட்சி நகரில் எம்.ஜி.ஆர்.,மன்றம் அருகே அ.தி.மு.க., கொடி கம்பத்தை புதிதாக நிறுவ அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். இதுபோல் மேலும் சில மனுக்கள் தாக்கலாகின. ஜன.27 ல் நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,'தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்,' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனர் அம்மாவாசிதேவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மார்ச் 6 ல் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. இதை மறு சீராய்வு செய்வதற்கு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

nb
ஏப் 26, 2025 09:40

அதே மாதிரி எல்லா தலைவர்கள் சிலைகளையும் பொது இடத்தில் இருந்து மாற்றி அந்த அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பூட்டி வைத்தால் நல்லது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை